அமைச்சர் அதாவுல்லா தரப்பின் வேண்டுகோளாவது அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டுமா..?
(சமட்)
வெள்ளத்தில் அமிழ்ந்திருந்த அநுராதபுரம் மல்லத்து ஓயா வீதி பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவமானது பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாட்டை காட்டியுள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.
அநுராதபுரம் மல்லத்து ஓயா வீதி பள்ளிவாசல் மீதான தாக்ககுதல் சம்பவம் குறித்துக் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அண்மைக்காலமாக இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. அவற்றை நிருபிக்கும் சம்பவங்களே அதிகளவில் நடந்து வருகின்றன. இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சகல இன மக்களுடனும் புரிந்துணர்வுடனே வாழ விரும்புகின்றனா. வாழ்ந்தும் காட்டியுள்ளனர். பேரினவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவோர் இலங்கையின் வரலாற்றை சற்றுப் பினனோக்கிப் நோக்குவார்களேயானால் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒற்றுமைக்கும் முஸ்லிம்கள் எத்தகைய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்நாடு ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இந்நாட்டில் வாழுக்கின்ற அனைவரும் தங்களுக்குரிய உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள். இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பேரினவாதக் குழுக்களைச் சோர்ந்தோர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
உலகிலேயே சக்தி மிக்க இயக்கமாக விளங்கிய விடுதலைப் புளிகளை அழித்தொழித்த அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களின் மனங்களைப் புன்படுத்தும் ஈனச் செயற்பாடுகளை மேற்கொள்ளும், நாட்டின் அமைதிக்கும் இன ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்தும் பேரினவாத சிறு குழுக்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் அழிக்க முடியாமலும் கட்டுப்படுத்த முடியாமலும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
முஸ்லிம்களின் மத உணர்வுகளையும் மன உணர்வுகளையும் தூண்டி இந்நாட்டில் மீண்டுமொரு அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிக்க ஒரு சில பேரினவாத சக்திகள் முயற்சிக்கின்றன. முஸ்லிம்களுக்கும் அவர்களின் மார்க்க விடங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் இந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தாது இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும். பள்ளிவாசல்களும் கோயில்களும் தேவாலயங்களும் இப்பேரினவாதிகளுக்கு என்ன செய்கிறது. மத வழிபாட்டுத் தளங்கள் மக்களை நல்வழிப்படுத்தும் கேந்திரத்தளங்களாகும். இத்தளங்களை அழித்தொழிப்பதன் ஊடாக அவர்கள் எதை அடையப்போகிறார்கள் என்று வினவ விரும்புவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் உதுமாலெவ்வை அநுராதபுரம் மல்லத்து ஓயா வீதி பள்ளிவாசல் மீதான தாக்ககுதல்களை மேற்கொண்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
பாருடா
ReplyDeleteஐயா இப்பவும் பேரின வாதிகள் எதை அடைய விரும்புகிறார்கள் என நம்மிடம் கேள்வி கேட்கிறார்?
பரவாஇல்லை இப்பவாவது மல்லத்து ஓயாவில் பள்ளி ஒன்று இருப்பது தெரிந்து இருகிறதே?
கிழமைக்கு ஒருக்கா ஜும்மாக்கு போவாரோ ?
ஐயா.! அங்கே
ReplyDeleteசட்டத்துக்கே சங்கு ஊதக் காத்திருக்கானுகள்
இவங்களையும் சட்டத்தின் முன் நிறுத்தனுமா?
"எய்தவன் இருக்க அம்பை நோவேதேன்...!"
அனுராதபுர மல்வதுஒய பள்ளி மூன்றாவது முறையாகவும் தாக்கப்பட்டது ,முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலாக மாத்திரம் கருதிவிடக்கூடாது.இது முப்படைகளின் தளபதியான மன்புமிஹு ஜனதிபதியவர்களின் ஆளுமைக்கெதிறன சவாலாஹும் .சிறுபான்மை இனத்தவர்களின் மத உரிமையை பாதுகாக்கும் அரசாங்கத்துக்கு எதிரான சவாலாகும் .
ReplyDeleteஅமைச்சர் அவர்களின் கவனத்திற்கு ! அனுராதபுரத்திக்கு போக தேவை இல்லை உங்கள் அம்பாறையில் இனத்துவேசம் வேரூன்றுகிறது.முஸ்லிம்களின் காணிகளுக்கு உறுதி பத்திரம் வழங்குவதில் சிரம்
ReplyDelete*இப்போது மாத்தறையில் இருந்து திட்டமிட்ட குடி ஏற்ற்றதின்மூலம் விகிதகாசர மாற்றங்கள் நடக்கிறது.
*ஒலுவில் பாலமுனை அட்டாளைச்சேனை மிகவிரைவில் புதிய எல்லை நிர்ணயதில் தீகவாபியுடன் இணைக்கப்பட்டு புனித பூமியாகும் சாத்தியம் இருக்கிறது
*நுரைச்சோலை கிராமத்தை யார் காட்டிக்கொடுத்தது