கார் எஞ்சின் கதகதப்பில் மலைப்பாம்பு..!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியர், 19 ஆயிரத்து 485 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட குர்கர் தேசிய வன விலங்கு பூங்காவை சுற்றிப்பார்க்க தங்களது காரில் சென்றனர். பூங்காவில் உள்ள சிங்கங்களின் சாகசங்களை கண்டு ரசித்துவிட்டு அவர்கள் காரை நோக்கி வந்தபோது, புல்தரையில் ஊர்ந்துக்கொண்டிருந்த 5 மீட்டர் நீளமுள்ள மலைப் பாம்பு, இவர்கள் வரும் ஓசையை கேட்டு காரின் அடியில் நுழைந்தது.
இதை அந்த தம்பதியர் கவணித்தபோதிலும், புல் தரையில் ஊர்ந்தபடி காரின் மறுமுனைக்கு சென்றுவிடும் என்று சிறிது நேரம் காத்திருந்தனர். பின்னர், காரை எடுத்துக்கொண்டு அவர்கள் வன விலங்கு பூங்காவை விட்டு வெளியே வந்தனர். இருப்பினும், அந்த மலைப் பாம்பு தங்களின் காருக்குள் இருப்பது போன்ற பிரமை அவர்களுக்கு உண்டானது.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கைகளின் அடிப்பகுதி, பின்பகுதி ஆகிய இடங்களில் தேடிவிட்டு, இதையும்தான் பார்த்து விடுவோமே... என்ற எண்ணத்தில் என்ஜின் பகுதியை திறந்து பார்த்த அவர்கள் அதிர்ந்துப்போயினர்.
என்ஜினின் கதகதப்பில் இதமாக 5 கி.மீட்டர் பயணித்து வந்த அந்த பாம்பை, வனவிலங்கு காப்பக ஊழியர்கள் வந்து பிடித்துச் சென்றனர்.
Post a Comment