முஸ்லிம் மீடியா போரத்தின் கருத்தரங்குகள்..!
சமூக ஊடகங்களும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் என்ற தலைப்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை மண்டபத்தில் நடைபெறும். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பேரம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கலந்துரையாடல் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நொலேஜ் பொக்ஸ் பணிப்பாளர் அஸ்கர்கான் மேற்படி தலைப்பில் உரையைாற்றுவார். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் முஸ்லிம் மீடியா பேரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் 0777703994 அல்லது தேசிய அமைப்பாளர் ரிப்தி அலி 0773630668 ஆகியோருடன் தொடர்புகொண்டு அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு முஸ்லிம் மீடியா போரம் கேட்டுள்ளது.
உயர்தர மாணவர்களுக்கான ஒருநாள் சமூக ஊடகவியல் செயலமர்வு
முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள உயர்தர மாணவர்களுக்கான ஒருநாள் சமூக ஊடகவியல் செயலமர்வு தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நாளை சனிக்கிழமை 19ஆம் திகதி காலை 8 மணிக்கு நாரஹேன்பிட்ட, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் லீ்க் வாலிப முன்னணியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி செயலமர்வுக்காக விண்ணப்பித்தவர்களில் 40 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பிரபல வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைபெறும் இச்செயலமர்வின் முதற்கட்ட நிகழ்வு அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.Delete Reply Reply All Forward Move Spam Actions Next Previous
Post a Comment