Header Ads



முஸ்லிம்கள் மீதான நெருக்கடி - மஹிந்தவின் ஆசியாவின் அதிசய கனவுக்கு பாதகமாக அமையும்

(எம்.எம்.ஏ.ஸமட்)

'பேரினவாத அமைப்புக்களினால்  முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கீடுகள் நிறுத்தப்பட வேண்டும்'. இவ்வாறு தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.

காழ்புணர்ச்சியின் காரணமாக  இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களைக் இலக்கு வைத்து பேரினவாத அமைப்புக்கள் சில அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் விஷமத்தனமான நடவடிக்கைள் குறித்துக் கருத்துக்கேட்டபோதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை இது குறித்து மேலும் குறிப்பிட்டதாவது,,


கொடூர யுத்தம் நிறைவுற்று, நிம்தியாக மக்கள் வாழும் சூழல் உருவாகி வரும் நிலையில், ஓரிரு பேரினவாத அமைப்புக்கள்  வேண்டத்தகாத  விமர்சனங்கள், அறிக்கைகள். நடவடிக்கைகளினூடாக இந்நாடடில் வாழும் சிறுபான்மை மக்களை புண்படுத்தி வருகின்றன.

இந்நாடு பல்லின சமூக மக்கள் வாழும் சுதந்திரத் தேசமாகும். ஒவ்வொரு சமூகம் அச்சமூகம் சார்ந்த சமூக, சமய. கலை, கலாசார பண்பாட்டு விடயங்களை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில் சுதந்திரமாகப் பின்பற்றவும் அனுபவிக்கவும் உரிமையுடையவர்கள். இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கையின் அரசியல் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்  ஓரிரு பேரினவாத அமைப்புக்கள். அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதும், வேண்டுமென்றே முஸ்லிம்களின் சமய விடயங்களில் தலையிடுவதுமாக பல்வேறு விஷமத்தனமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதானது கண்டிக்கத்ததும் உடன் நிறுத்தப்பட வேண்டியதொன்றாகுமென அவர் குறிப்பிட்டார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் வரலாற்றுப் புரிந்துணர்வுடனும் சமூக ஒற்றுமையுடனும் வாழவே விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களின் இத்தகைய நல்லெண்ணத்தைப் புதைகுழியில் தள்ளிவிட்டு, சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி தீய சக்திகளின் கனவுகளை நனவாக்க முயற்சி மேற்கொண்டு வரும் ஒரிரு பேரனிவாத அமைப்புக்களின் இத்தகைய நடவடிக்கைகளை சமூக ஒற்றுமையை விரும்பும் இந்நாட்டின் எந்தவொரு பிரஜையும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என நம்புகின்றேன்.

இந்நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துவரும் இவ்வேளையில் இத்தகைவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையாக அமையுமென்று சுட்டிக்காட்டிய அவர், இவ்வமைப்புக்களின் முஸ்லிம்கள் மீதான நெருக்கீட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டுமெனவும்  இவ்விடயத்தில் முஸ்லிம் மக்கள் பொறுமை காப்பதுடன் நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டமென வேண்டுவதாகவும் அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் குறிப்பிட்டார். 

6 comments:

  1. ippayavathu unkada MUTHTHU VAAYAI thuranthinkala sir

    ReplyDelete
  2. Ennathan sabry apudi sollitanga? Iwanga than kaaranam, arasankathodu thodaroullawanga than Awarkal ,arasankam mounam, janathipathi nadawadikkai edukka wenum endu sollitankala?

    ReplyDelete
  3. nanga koili illa kokarippathattku......

    ReplyDelete
  4. ivvalavu kaalam iruntha mathiri amaithiya irungalean.

    ippadi arikkavitta boss thitta maattaaranga?

    ReplyDelete
  5. makkal ondum solla maattanga neenga amaithiya irunga sir

    ReplyDelete

Powered by Blogger.