Header Ads



அமைச்சர் றிசாத் உறக்கத்தில்..?


வடக்கில் மீளக்குடியேறிவரும் முஸ்லிம்கள் மீது தமிழ் அதிகாரிகள் மேற்கொள்ளும் இனவாத வன்முறை குறித்து அமைச்சர் றிசாத் பஸில் ராஜபக்ஸ தொடக்கம் சாதாரண முஸ்லிம் பொதுமகள் வரை தினமும் பேசி வருகின்றனர். அமைச்சர் றிசாத் பதியுதீன்கூட பலவேளைகளில் இந்த தமிழ் அதிகாரிகளின் இனவாத நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.

இருந்தும் என்ன பயன்...?

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளராக பணியாற்றிய ஜீனூஸ் தமிழ் அரச உயர் அதிகாரிகளின் இனவாத வன்முறைக்கு காவு கொள்ளப்பட்ட விடயம் அமைச்சர் றிசாத் உட்பல பலரும் அறிந்த விடயம். கிராம சேவையாளர் எதிர்கொண்ட மோசமான தமிழ் இனவாத வன்முறை குறித்த அமைச்சர் றிசாத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தையும் எமது இணையம் அறியும்..!

இவ்வாறான நிலையில்  அரசாங்கத்தின் செல்லப்பிள்ளை மற்றும் வடக்கு முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவைப் பெற்றவரென கூறப்படும் அமைச்சர் றிசாத், வடக்கு முஸ்லிம்கள் மீது தமிழ் அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் இனவாத வன்முறையை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் என்ன..?

அரசாங்க அமைச்சராக விளங்கும் அமைச்சர் றிசாத், தமிழ் அரச அதிகாரிகளின் முஸ்லிம்கள் மீதான கொடூர வன்முறையை தடுக்க திராணியற்றவராக விளங்குவாராயின் அவர் ஏன் இந்த அரசாங்க அமைச்சுப் பதவியை பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது எமக்கு புரியவில்லை.

தமிழ் அரச அதிகாரிகளின் இனவாத ஒடுக்குமுறை, கிறிஸ்தவ மேலாதிக்கம் என வடக்கு முஸ்லிம்கள் மிகமோசமான நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ள நிலையில்  அமைச்சர் றிசாத் பதியுதீன் உறக்கத்தில் உள்ளாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது.

வடக்கு முஸ்லிம்கள் பல்வேறு முறைகளிலும் புறக்கணிப்பு உட்படுகிறார்கள் என்ற விடயம் அமைச்சர் றிசாத்திற்கு தெரிந்திருந்தும் அந்த புறக்கணிப்புகளை நிறுத்த அவர் மேற்கொண்ட நகர்வுகளை நாம் இதுவரை அறியவில்லை. வெளிப்படையான தமிழ் இனவாத நடவடிக்கை வடக்கு முஸ்லிம்களை குத்தி காயப்படுத்துகிறபோது அதனை தடுக்க அரசாங்க அமைச்சர் றிசாத்தினால் முடியவில்லை என்றால் அல்லது கண்டும் காணாது போல இருப்பின் எதிர்காலங்களில் வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தை இழக்கும் அபாய நிலையே உருவாகும்.

ஆளும் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியை வகிக்கும் அமைச்சர் றிசாத், வடக்கு முஸ்லிம்களை தமிழ் அரச அதிகாரிகளின் இனவாத வன்முறையிலிருந்தும், கிறிஸ்த்தவ மேலாதிக்கத்திலிருந்தும் பாதுகாக்க தவறுவாராயின் நிச்சயம் அவரை முஸ்லிம் சமூகம் பழிசுமத்தும்.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி அல்லது அரசாங்கத்தின் உரிய தரப்பினரின் கவனத்தை ஈர்க்க இல்லையேல் அநீதிக்குட்படுத்தப்படும் வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நீதியை அவர் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமென்பதுவே எமது வேண்டுகோள்.

எமது யாழ் முஸ்லிம் இணையத்தின் நீண்டகால வாசகர்களில் அமைச்சர் றிசாத்தும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். தினமும் எமது இணையத்தை பார்வையிடும் ஒரு அரசியல்வாதி என்பதும் நாம் அறிந்ததே. அந்தவகையில் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை விரைவு படுத்துவீர்கள் என நம்புகிறோம்..!

8 comments:

  1. இனாவாத நடவடிக்கைக்கு
    அரசாங்கம் மௌனம்
    அமச்சர்கள் சம்மதம்...!

    ReplyDelete
  2. தயவு செய்து யாரும் அவரை எழுப்ப வேண்டாம்.

    அவர் படுத்த சவுபில திருப்பி படுக்கார்

    ஆரா ரீ ரா ரோ றிசாத்தே கண் உறங்கு ..............

    ReplyDelete
  3. இலங்கையில் வாழுகின்ற மக்கள் ஒரு விடயத்தை மிகவும் நிதானமாக சிந்திக்கவேண்டும். அது என்ன ? ஆம் நம் நாடு இதுவரை அனுபவித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் பின்னால் யார் இருக்கிறார்கள்! கண்முன்னை மிகவும் திட்டமிடலுடன் அவர்களின் இனம் , ஏன் அவர்களின் மதம் எந்தவொரு பெரிய பாதிப்புகளுக்கும் உட்படாமல் எல்லாருடனும் (முஸ்லிம்கள் தவிர்ந்த ) அந்த அந்த மதத்தவர்களின் பெயருடன் தங்கள் மதத்தை காட்டிக்கொள்ளாமல் இரண்டுபக்கமும் இருந்து கொண்டு படிப்பறிவில்லாத , சிந்திக்கத்தெரியாத மக்களின் உணர்வுகளை கிளப்பி தாங்கள் மிகவும் கட்சிதமாக காரியமாற்றுகிறார்கள் . ஆகவே முஸ்லிம்களாகிய நாம் மிகவும் திடமான திட்டமிடலுடன் இந்த குள்ள நரிகளுக்கு எதிராக நமது அறிவு பயன்படுத்தவேண்டும் அதக்காக பணபலம் மூலம் அந்த ஏதும் அறியாத பெரும்பான்மை மதத்தவர்களின் கண்களை திறக்கவேண்டும் அதக்கான முயட்சிகளை திடமாக உணர்த்தினால் நிட்சயம் இதக்கு சாதகமான பதில் கிடைக்கும். ஆகவே கொஞ்சம் சிந்தியுங்கள் உலகத்தில் இன்று நடப்பது என்ன? அதக்கு யார் காரணம்! பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுடன் ஒன்றாக இருந்து முஸ்லிம் சார் பெயருடன் வாழும் அவர்கள் தான் காரணம் பாலஸ்தீன மக்கள் அகதியாக ..................தினமும் மரணத்தை எதிர்நோக்கும் நமது உறவுக்கு யார் காரணம். இப்போது புரிந்து இருக்கும். புறப்படுங்கள் குள்ளநரிகளின் முகத்திரை நமது பெரும்பான்மை மக்களால் களையப்படவேண்டும்.

    ReplyDelete
  4. இப்படி மதவாதம் பேசி சகோதரர்களாக இருக்கும் மக்களுடையே பிளவை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்றுக்கொடுங்கள். நம்நாட்டில் அரசியல்வாதி இனவாதம் பேசுகிறான் நீங்கள் மதவாதம் பேசுகிறீர்கள். அவனது நோக்கம் ஆட்சியை பிடிப்பதாக உள்ளது உங்கள் நோக்கம் என்ன?
    பிரிவினையை விட்டு தமிழ் பேசும் மக்கள் (இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவம்) யாவரும் தமிழர் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்கள் உரிமைகளை அவர்கள் வெற்றி கொள்வதற்க்கு உரிய வழிகளை கட்டுக்கொடுங்கள்.

    ReplyDelete
  5. முஸ்லிம்களும் கவனிப்பதாக இல்லை முஸ்லிம் அரசியல் வாதிகளும் குரல் கொடுப்பதாக இல்லை முஸ்லிம் நாடுகளும் அக்கரை எடுப்பதாக இல்லை அப்போ இனி யார்தான் இவர்களை கவனிப்பர் இவர்களின் அவளங்கள் யெல்லாம் முஸ்லிம் என்ற ஒரே காரணதாலா அல்லது வேரெதுவும் காரணத்தாலா???

    ReplyDelete
  6. குறிபிட்ட பெண் உதவி அரசாங்க அதிபர் முஸ்லிம் விரோதப் போக்கை கொண்டிருப்பதை பார்த்து நாம் கொதிதேல தேவையில்லை. நபிக்கு எதிராக செயற்பட்ட ஹிந்தவுக்கு ஹிதாயத் கிடைக்கவில்லைய. எனவே இந்த அம்மணிக்கும் இஸ்லாத்தை பற்றி விளக்கங்கள் அளிக்கப் பாடல் வேண்டும். அத்துடன் யாரவது இஸ்லாம் என்றால் என்ன?, எப்படியான சகொதரத்துவா மார்க்கம்?, அது எப்படி எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்?, பைபிளில் இறுதி நபி முஹம்மது ஸல் பற்றி என்ன கூறப் பட்டுள்ளது? பைபிள் கடவுள் ஜேசு என்று கூறிகிறத அல்லது கடவுளை கர்த்தர் என்று கூருகின்றத? கர்த்தர் என்பவர் ஏக இறைவன் என்பதை குறிக்கும் பதமா? அல்லது ஜேசுவை குறிக்க அது பயன் படுத்தப் பட்டுள்ளதா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு நாம் விளக்கமளிக்கும் புத்தகங்களை கொடுக்க வேண்டும். அவர் மட்டும் சத்திய மார்கத்துக்குள் நுழைந்து விட்டால் யாழ்பாண முஸ்லிம்களின் மீள் குடிய்ற்றம் மிக வேகமாக இடம் பெரும். Insha Allah

    எண்கள் இறைவா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படக் கூடியவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஹிதாயத் எனும் நேர் வழியைக் காட்டுவாயாக. அவர்களை முஸ்லிம்களுக்கு சார்பானவர்களாக மற்றுவாயாக. ஆமீன்!

    ReplyDelete
  7. minister thanathu muluppalaththayum em ina viduthalaikke payanpaduthuhirar ivarai ina vathiyahavum,adippadaivathiyahavum kadda sila inakkulukkal mulu moochchudan eedupadukinnranar ithai neenkal ariyamal irukka niyayam illai amaichcharukku sapportaha entha oru muslim ministaravathu kural kodukkirarkala thamil mediakkal ivarin natpeyarai keduppathil mun nitkinrana

    ReplyDelete
  8. singam amaidiya than irikum..

    ReplyDelete

Powered by Blogger.