'வறுமையற்ற இலங்கை' - வன்னி மாவட்டத்தில் தெளிவுபடுத்தும் கூட்டம்
வறுமையற்ற இலங்கையினை உருவாக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிந்தனைக்கமைய வன்னி மாவட்ட மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதன் முதலாவது கூட்டம் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்ற தெளிவூட்டும் நிகழ்விற்கு மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
கடற்றொழில்,விவசாயம்,சிறு கைத்தொழில்,வங்கி, உள்ளிட்ட துறைகளில் வளவாளர்களால் அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள்,மதகுருமார்கள்,முதியோர்கள்,அமைப்புக்களின் பிரதி நிதிகள்.அதிபர்கள்,குடும்ப சுகாதார நல உத்தியோகஸ்தர்கள்.உட்பட பலரும் இதன் போது அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹ-னைஸ் பாருக்,முத்தலிபாவா பாருக்,மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர்.ஸ்டேன்லி டி மெல் உட்பட பலரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர். அதே வேளை நானாட்டான்,மற்றும் மாந்தை பிரதேச செயலகத்திலும் இந்த கூட்டங்கள் இடம் பெற்றது.
வறுமை ஒழியனுமா கீழே உள்ள வீடியோவினை முழுமையாக கேளுங்கள்
ReplyDeletehttp://tmclivetelecast.com/watch_video.php?v=NSWOOHMU7RA3