Header Ads



தந்தி முறையை ரத்துச்செய்யவில்லை - அமைச்சர் ஜீவன் குமாரதுங்க


(Sfm) அஞ்சல் திணைக்களத்தினால் நடை முறைப்படுத்தப்படும் தந்தி முறைமையை கைவிடுவதற்கான எந்தவிதமான தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த முறைமையில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் திணைக்களம் மற்றும் மத்திய தந்தி திணைக்களம் ஆகிய இணைந்து செயல்பட்ட காலப்பகுதியில் இந்த சேவை ஆரம்பமானது.

எனினும், ஸ்ரீ லங்கா டெலிகொம் என்ற பேரில், கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து தந்தி சேவையினை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக நாடளாவிய ரீதியாக ஆயிரத்து பதினெட்டு தந்தி வழங்குனர்கள் சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.