பதியதலாவையில் நடமாடும் சேவை
(வதூத் இர்பான்)
கிழக்கு மாகாண மக்களின் வீதி, நீர்ப்பாசனம், வீடு, மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை மேற்கொள்ளும்பொருட்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்;. உதுமாலெப்பையினால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நடமாடும் சேவை நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. அதில் ஒரு கட்டமாக அம்பாறை மாவட்டத்தின் பதியதலாவை பிரதேசத்திலுள்ள மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு நடமாடும்சேவை இன்று பதியதலாவை மொறதெனிய பிரதேசத்தில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச்செயலாளர் எம்.ஐ. சலாவ்தீன், அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் எம்.எஸ். ஜஹாங்கீர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பிரதேசமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நடமாடும்சேவையில் மக்களின் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அப்பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளும் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டது, கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் 'தயட கிருல்லை' தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு பல அபிவிருத்தித் திட்டங்கள் பதியதலாவை பிரதேசத்தில் இடம்பெறவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment