Header Ads



அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் 'சுவர்ண புறவர'


(ஜே.எம். வஸீர்)

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்படும் சுவர்ண புறவர விருது வழங்கும் வைபவமும் உள்ளூராட்சி  தேசிய மாநாடும் வினைத்திறன் மிக்க உளளுராட்சி சேவைகளினுடாக சுபீட்சமானதோர் எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் அலறி மாளிகையில் 2013.01.08ம் திகதி செவ்வாய்கிழமை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற ஏற்பாடாகியள்ளது. 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இம்மாநாட்டில் இலங்கையில் சிறந்த மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கு விருதுகள் வழங்கப்படவிருப்பதுடன் சிறந்த மூன்று திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் ஈடுபட்ட உள்ளூராட்சி சபைகளுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க உள்ளிட்ட தீவின் எல்லாப் பாகங்களிலுமுள்ள ஆளுனர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், உள்ளூராட்சி நிறுவனத் தலைவர்கள், உள்ளூராட்சி நிறுவன மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சித்துறையின் துறைசார் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 




No comments

Powered by Blogger.