Header Ads



அக்கரைப்பற்றில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை


(எஸ்.எல். மன்சூர்)

அக்கரைப்பற்றில் இயங்கிவரும் சர்வதேச கற்கைகள், தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்திற்கான அமைப்பின் அனுசரனையுடன் அங்கு கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கான கற்றல் உபகரணங்களைத் தயாரிப்பது பற்றிய விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று அதன் தலைமைத்துவ அலுவலகத்தில் இன்று (12.01.2013) அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும், சமாதான நீதவானுமாகிய எம்.ஏ. ஏ. ஸிஹார்தீன் தலைமையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரிய ஆலோசகரான ஏ.எல். முகம்மட் அவர்கள் வழிகாட்டலில் நடைபெற்ற பயிற்சியின்போது நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கடந்த 2002ஆண்டிலிருந்து இயங்கிவரும் மேற்படி அமைப்பானது இப்பிராந்தியத்தில் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான பல்வேறு செயற்றிட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. மாணவர்களின் தனியாள் வேறுபாட்டிற்கேற்ப, கல்வி நிபுணத்துவ ஆலோசனைகள், பன்முக நுண்ணறிவு விருத்தி, ஒன்றிணைந்த ஆளுமை மற்றும் சமநிலை ஆளுமை மேம்பாட்டுக்கான தலைமைத்துவம், பிள்ளைநேயம், தேர்ச்சிமையக் கலைத்திட்டம், பிள்ளைநல நிருவாகம் போன்ற தனித்துவமிக்கதான அடைப்படையில் மிகத் திறமைமிக்க ஆசிரியர்களால் நடைபெறுகின்றன. 

இதன் ஒரு அங்கமாக ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை விசேடமாக பயிற்றுவிக்கும் திட்டத்திற்கமைவாக கற்றல் உபகரணப் பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்து முழுநாள் பயிற்சி வகுப்பு அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.






No comments

Powered by Blogger.