அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா
(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று (2013-01-21) திங்கட் கிழமை வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விசேட அதிதிகளாக அட்டானைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர், ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்களான யூ.எம்.வாஹித், அப்துல் ரஸாக், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.அப்துல் முனாப் மற்றும் அட்டாளைச்சேனை டி.பி.ஜயா வித்தியாலய அதிபர் அப்துல் ஜப்பார், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர் உட்பட மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் அதிதிகள் கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர். இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.
வுpத்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸின் பெரும் பங்களிப்பினால் இவ்வித்தியாலயம் பாரிய வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அன்பார்ந்த சகோதரர்களே, பெற்றோர்களே ,
ReplyDeleteதயவு செய்து பாடசாலை, மற்றும் ஆன்மீக விழாக்களிலும் இந்த அரசியல் வாதிகளை அதிதிகளாகவோ அல்லது பார்வையாலராகவோ அழைக்க வேண்டாம்.
யாருக்கு தெரியும் இவர்கள் படிக்கும் காலங்களில் ஒழுங்காக பள்ளிக்கு போனார்கலென்று அல்லது படித்தார்கலென்று ?
இவர்களே ஊழலில் மிதப்பவர்கள் .
நமது வருங்கால சந்ததியினருக்கு இவர்களை நல்லவர்களாகவோ , தலைவர்களாகவோ சித்தரிக்க வேண்டாம்.
இந்த பிஞ்சி உள்ளங்களில் நஞ்சை நாமே விதைக்கவேண்டாம் .