Header Ads



றிசானாவின் குடும்பத்தை விற்றுவிடாதீர்கள்...!


சகோதரி றிசானாக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சில நாட்கள் கடந்துவிட்டன. அதுகுறித்த வாதப்பிரதி வாதங்கள் இன்னும் ஓய்வடையவில்லை. றிசானாவின் தாயார் தனது மகளின் மரணத்திற்கு பின்னர் எமக்கு கூறிய சில விடயங்களை முழு முஸ்லிம் சமூகத்துடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

* சவூதிஅரேபியா சிறைச்சாலையில் றிசானா மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்தபோது லலித் கொத்தலாவல (செலிங்கோ) கொழும்பில் சகல வசதிகளுடன்கூடிய  வீடொன்றை றிசானா குடும்பத்தினருக்கு வழங்க முன்வந்தார். அதனை றிசானா குடும்பத்தினர் முற்றாக நிராகரித்தனர். எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்கள் மகளை எங்களிடம் கொண்டுவந்து தாருங்கள். அது போதும் என்பதுதான் கொத்தலாவளைக்கு றிசானா குடும்பத்தினர் கூறிய பதில்.

* மற்றுமொரு தடவை ஒரு பணக்காரர் 45 இலட்சம் ரூபாய்களை றிசானா குடும்பத்திற்கு வழங்க முன்வந்தர்ர். அதனையும் றிசானா குடும்பம் நிராகரித்தது.

* ஒருமுறை றிசானாவை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் சவூதி அரேபியா சென்றுள்ளனர். சில கைவேலை செய்து சிறைச்சாலையில் கூலியாக பெற்றுக்கொண்ட 50 றியால் பணம் றிசானாவின் கையில் இருந்துள்ளது. அந்தப்பணத்தையும் றிசானா தனது தாயாரிடமே ஒப்படைத்துள்ளார். அவர்கள் இலங்கை வந்தடைந்தவுடன் அந்த 50 றியால் பணத்தையும் தங்களைவிட வறுமைக்குட்பட்டவர்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளனர்.

* றிசானாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. றிசானாவின் தாயார் காட்டுக்குசென்று விறகு சேகரித்து, பின்னர் அதனை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டுதான் கறி சமைத்து சாப்பிடுவார்கள். பலநேரங்களில் சோறு மாத்திரம்தான் அவர்களின் வயிற்றை நிறைத்துள்ளது.

வறுமையின் அகோரம் என்னவென்று றிசானாவின் குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.மேற்குறிப்பிட்ட துயர் மிகு சம்பவங்களை நாம் பகிர்ந்துகொள்ள ஒரு முக்கிய காரணம் உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ றிசானா குடும்பத்திற்கு வீடு ஒன்றை கட்டிக்கொடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளார்.  முஸ்லிம் அரசியல் வாதிகளும் உதவி வாக்குறுதிகளுடனும், புகைப்பட பிடிப்பாளர்களுடனும் றிசானாவின் வீட்டுக்கு படையெடுக்கவுள்ளனர்.

பாதிக்கப்பட்ட றிசானாவின் குடும்பத்தினருக்கு உதவுவது நமது கடமை. அந்தவகையில் நமது முஸ்லிம் உறவுகள் குறிப்பிடத்தக்க உதவிகளை நிச்சயம் றிசானா குடும்பத்திற்கு செய்வார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இருந்தபோதும் நாம் இங்கு கூறவருவது என்னவென்றால் றிசானா குடும்பத்தினரின் தற்போதைய துயர்மிகு நிலவரத்தை நமது அரசியல்வாதிகள் தமது சுயஇலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என்பதுதான் எமது விருப்பம். முடிந்தால் அவர்களுக்கு உதவுங்கள். இல்லாவிட்டால் ஒதுங்கியிருங்கள். அதைவிடுத்து றிசானா குடும்பத்தை தொடர்புபடுத்தி ஊடகங்களில் விளம்பரம் தேடாதீர்கள். அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு முன்னதாகவே உதவி செய்தவர்கள் போன்று அறிக்கையிடுவதை தவிருங்கள்.

றிசானாவின் குடும்பத்தின் வறுமையை பயன்படுத்தி அல்லது அவர்களின் துயரத்தை பயன்படுத்தி அவர்களோடு இணைந்து போட்டோ எடுப்பதையோ அதை ஊடகங்களுக்கு அனுப்புவதையோ நிறுத்துங்கள். றிசானாவின் குடும்பத்தாருடன் இணைந்து போட்டோ எடுப்பதால் மாத்திரம் அவர்களின் வலி குறைத்து  விட்டதாக நினைத்துவிடாதீர்கள்.

சகோதரி றிசானா குடும்பத்திற்கு உதவப்போகும் முஸ்லில் அரசியல் வாதிகளே..!

உங்களின் உதவியின்றியும் றிசானா குடும்பம் உயிர் வாழ்ந்தது என்பதை ஞாபகம் வைத்திருங்கள். காட்டில் விறகு சேகரித்து, அதனை விற்று, அந்த பணத்தில் உயிர்வாழ்ந்த றிசானா குடும்பம் உங்களின் உதவியின்றியும் உயிர்வாழமுடியும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

இந்நிலையில் றிசானாவின் பரிதாப மௌத்தையும், அதனைக்கொண்டு அரசியல் இலாபமீட்டவும் அரசியல்வாதிகள் முயன்றால் அது வெட்கக்கேடானது.

எமது யாழ் முஸ்லிம் இணையமானது 'றிசானா குறித்த அரசியல்வாதிகளின் அனுதாப செய்தியை பிரசுரிக்க மாட்டாது'' என பகிரங்கமாக அறிவித்தது முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே சிறு கொந்தளிப்பையும் மறுபக்கம் முஸ்லிம் சமூகத்திடம் வரவேற்பையும் பெற்றிருந்தது.

றிசானா குடும்பத்தை பயன்படுத்தி இலாபமடைய முயலும் எந்தவொரு தனிநபருக்கும், அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் சார்பு ஊடகங்கள் எந்தவித முக்கியத்துவத்தை வழங்ககூடாது என நாம் சக ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம்..!!

19 comments:

  1. jaffna muslim க்கு ஒரு சல்யூட் !

    ReplyDelete
  2. very good decision Well Done

    ReplyDelete
  3. டயரை தலையில் போட்டு உலாத்தும் காட்டாரபி கூட்டமே ...... ஒரு குழந்தை எப்படி கொல்லப்பட்டது என அறிய 07 வருச விசாரனையா ??..... வெட்கமா இல்லை .. ? பால் தொண்டையில் இறுகி மூச்சு திணறி உயிர் போனாலும், அதை கொலை என்றுபழி போட்டு அப்பாவிகளை கொன்று குவிக்கும் இன வெறி பிடித்த காட்டரபி கும்பல்...... உண்மையான இஸ்லாமியர்கள் பிரார்த்திப்பது..
    .இந்த சவுதி கார அரபி இன வெறி பிடித்த மன்னர் களை இந்த உலகிலே கேவலப்படுத்துவாயாகா.. .
    அவர்களை ஆட்சியிலிருந்து விரட்டி அடித்து உண்மையான நீதி நேர்மை உள்ள அரபு முஸ்லிம் தலைவர்களை தருவாயாக.....
    கலீபாஹ் உமர் இப்னு கத்தாப் ஆண்ட இந்த அரபு மண்ணிலே அமெரிக்க ஐரோப்பிய நாசர்ராநிகளை .நக்கி திரியும் கேடு கெட்ட இந்த பண வெறி அரபு ஆட்சியாலர்களை அழித்து அவர்களுக்கு மறுமையிலும் கடும் தண்டனை கொடுப்பாயாக.....
    லட்ச்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலையில், இந்த பண வெறி அரபிகள் மலை மலையாக உணவுகளை அதுவும் விலை உயர்ந்த் உணவுகளை அநியாயமாக குப்பையில் எறியும் அக்கிரமத்தை தடுக்க இந்த அரபிகளை அடக்கி ஆள ஒரு நீதி உள்ள முஸ்லிம் தலைவரை தருவாயாக.
    பெண்களை இஸ்லாத்தின் பெயரால் அடிமை போன்று நடத்தும் , தன வேலை ஆட்களை அடிமை யாக நினைத்து வேலை வாங்கும் , சரியான சம்பளம் கொடாது கொடுமைபடுத்தும் .இந்த அரபிகளை அழிப்பாயாக ...

    ..மொத்தமாக இந்த அரபு வெறியனுகளை உலகிலே நாசமாக்கி பதிலாக ஒரு நல்ல கலீபாஹ் உமர் போன்ற ஒரு ஜனாதிபதியை த்ரருவாயாக.....

    ReplyDelete
  4. சிறந்த அறிவுரை நல்ல நிலைப்பாடு, யாழ் முஸ்லிம் இணைய வாசகர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு பெருமை அடைகிறேன்

    ReplyDelete
  5. ரிசானா விடயத்தில் மாத்திரமல்ல ஒரு விடயத்திலும் முஸ்லிம் m p களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். pl ..

    ReplyDelete
  6. well done jaffna Muslim don't publish any politician article

    ReplyDelete
  7. இன்ஷா அல்லாஹ்,

    இந்த இணையம் இன்னும் இந்த நிலையிலயே நிலைத்திருக்கட்டும்.

    மக்கள் இந்த மங்குனி அரசியல் வாதிகளை தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை .

    ReplyDelete
  8. நல்லதொரு கட்டுரை ..தேவையானதும் அவசரமானதும்...

    ReplyDelete
  9. Allahu akbar.arasiyal vathigaludan kooda irukkum vasakarkale ichcheithiyai avargalin kadukalukku ethhi vaiyungal antha marhooma rizanavudaiya aathmavin amaithikkahavavathu.yaallah iniyavathu intha suyanala arasiyalvathigal vizhithukkolla arul purivayaga!ameen.

    ReplyDelete
  10. GOOD DECISION !! LETS AVOID SYMPATHETIC DRAMA FROM ACTORS.

    ReplyDelete
  11. உங்களது பொது நல எண்ணங்கள் தொடர்ந்து நிலைபெறவேண்டும் அத்துடன் இஸ்லாமிய சட்டங்களை குறைகூற வேண்டாம் ”உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பைவற்றை அறியக்கூடிய அந்த அல்லாஹ் போதுமானவன் நாளை மறுமையில் தீர்பளிக்க.” ஆகவே இவ்விடயத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள் அத்துடன் இதை இஸ்லாத்தின் எதிரிகளிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  12. மர்ஹூம ரிஜானா நபீக் அவர்களின் வபாத் தொடர்பாக அரசியல்வதிகளின அனுதாப அறிக்கைகளை வெளியிட மாட்டோம் என்ற துணிச்சலான முடிவுக்கு எனது பாராட்டுக்கள் .வறுமை தனது அன்பு மகளை இழந்த சோஹம் ,போன்ற வற்றின் மத்தியிலும் அல்லாஹ்வை நம்பி ,நிலைகுலையாமல் நிமிர்ந்து நிற்கும் அக்குடும்பத்தின் மீது அவனின் அருள் மென்மேலும் சொறிவதாக .யாழ் முஸ்லிமின் அபிமானி என்ற வகையில் உங்களது இம் முயற்சியை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  13. i am agri with mahdi hassan

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. u r right . but unfortunately mutthur ulama sapai and some other molavies r trying to cover soudy government in the name of islam.pls v should understand the difference between the sharia law and soudy dictators own sharia law. pls yaal muslim must address this issue and should clarify to all muslims and non-muslim.

    ReplyDelete
  16. goooooooooooooooooooooooooooooooooooooooooooooood

    ReplyDelete

Powered by Blogger.