Header Ads



பாகிஸ்தான் - இந்தியா நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு



எல்லை பகுதியில், ராணுவத்தை குவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் வீரர்களின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளது. இந்திய ராணுவமும், எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளது. இதனால், எல்லையில், பதற்றமான சூழல் நிலவுகிறது.

8ம் தேதி, இந்திய எல்லைக்குள், பாக்., ராணுவத்தினர் பிரவேசித்தனர். கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், உயிரிழந்த இரண்டு ராணுவ  ஒரு வீரரின் தலையை, எடுத்தும் சென்று விட்டனர்.பாக்., ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, இந்திய வெளியுறவு செயலகத்துக்கு வரவழைத்து, கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய வீரர்கள் மீது, பாக்., ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் தான், அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்து விட்டது. பாக்., ராணுவத்தின் இந்த நடவடிக்கை, கவலைக்குரியது. காஷ்மீரில், எல்லை பகுதியில், இந்திய வீரர்கள் போதிய அளவில் உள்ளனர்.நாட்டின் நலனை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்துள்ளது. இரு நாட்டு, ராணுவ உயரதிகாரிகள், தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவு ஏற்படுகிறது என்பதற்காக காத்திருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. எல்லை பகுதியில் நடக்கும், 

ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்.நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது; அதன் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதில், லஷ்கர் அமைப்புக்கு தொடர்புள்ளதா என்ற விவரத்துக்குள், நான் செல்ல விரும்பவில்லை."தலை துண்டித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுடன் பணிபுரிந்த வீரர்கள், தங்களின் சகாக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு, பழி வாங்கும் வரை, சாப்பிடப் போவது இல்லை' என, அறிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி, தற்போது எதையும் கூற விரும்பவில்லை.இவ்வாறு அந்தோணி கூறினார்.

இந்திய தூதருக்கு சம்மன்:

எல்லை பகுதியில், இந்திய வீரர்கள் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில், பாக்., வீரர் ஒருவர் பலியானார். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் சரத் சபர்வாலுக்கு, பாக்., வெளியுறவு அமைச்சகம் சார்பில், நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்திய தூதரிடம், நடந்த சம்பவத்துக்கு, கண்டனம் தெரிவித்தும், விளக்கம் கேட்டும், பாக்., வெளியுறவு அமைச்சகம் சார்பில், நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 




No comments

Powered by Blogger.