செவ்வாய் கிரகத்தில் வற்றிப்போன ஆறு (படம்)
செவ்வாய் கிரகத்தில் 1500 கி.மீட்டர் நீளம், 7 கி.மீட்டர் அகலத்தில் பாய்ந்து, தற்போது வற்றிப்போய் கிடக்கும் ரெவுல் வேலிஸ் என்ற நதியை ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
2 கிளைகளாக உருவாகி செவ்வாய் கிரகத்தின் வடபகுதியான ஹெல்லாஸ் படுகையில் ஒன்றுகூடிய இந்த நதி, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாய்ந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.
தற்போது வறண்ட நிலையில் காணப்படும் இந்த நதியின் தடத்திற்கு அருகாமையில், அடர்த்தியான பனிக்கட்டிகளைப் போன்ற திடப்பொருள்களும் காணப்படுவதாக ஐரோப்பிய வின்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment