சேமாலியாவில் அத்துமீறிய பிரான்ஸ் படைகள் - பதிலடி கொடுத்த முஸ்லிம் போராளிகள்
சோமாலியாவில் 6000 பேர்களுடன் செபாப் என்ற போராளிகள் அமைப்பினர் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் அலெக்ஸ் என்பவரை பிணைக்கைதியாக பிடித்தனர்.
அன்றிலிருந்து அவர்கள் பிடியில் அவதிப்பட்டு வரும் டென்னிசை மீட்க பிரான்ஸ் பல்வேறு முறை முயன்றும் தீவிரவாதிகள் பேச்சுவார்த்தையில் உடன்படாமல் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ரகசிய அதிரடிப்படையினர் போராளிககளின் மறைவிடத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போராளிகள் 17 பேரும், பிரான்ஸ் அதிரடிப்படையினர் இருவரும் கொல்லப்பட்டனர். இருந்தும் பிணைக்கைதியை அவர்களால் மீட்க முடியவில்லை.
உளவாளியாக செயல்பட்ட பிணைக்கைதி டென்னிஸ் அலெக்சை கொன்று விடுவோம் என்று பிரான்சுக்கு செபாப் போராளிகள் எச்சரித்துள்ளனர். மேலும் சண்டையில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டு வீரர்களின் உடலை அவர்கள் எடுத்து சென்றுவிட்டனர் என்று போராளிகள் கூறியுள்ளனர்.
Post a Comment