Header Ads



குரங்குடன் பயணித்த ஈரான் விண்கலம் (படங்கள் இணைப்பு)


விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது ஈரான். ஈரான் கடந்த 2011-ம் ஆண்டு விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி சோதனை செய்தது.

இம்முயற்சி ‌தோல்வியில் முடிந்தது. எனினும் மேற்குலக நாடுகளுக்கு போட்டியாக ஈரான் தனது அறிவியல் வளர்ச்சியை எட்ட 2020-க்குள் மனிதனை விண்வெளியில் அனுப்பி சோதனை நடத்த முடி செய்தது.தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் நேற்று தலைநகர் டெஹரான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 2000 கிலோ எடை கொண்ட கவோஸ்ஹர் ராக்கெட் மூலம் பிஸ்காம் என்ற விண்கலத்தினுள் குரங்கினை வைத்து விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக ‌சோதனை செய்ததாக ஈரான் குடியரசு ,டி.வி.சானல் அதிகாரப்பூர்வமான வீடியோ காட்சியுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈரான் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், முதலில் நடத்திய சோதனை தோல்வியடைந்தது. இப்போது வெற்றிபெற்றுள்ளோம். அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் ஷெரீப்பாஸ்ட் விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு‌ள்‌ளோம் என்றார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஈரான் விண்வெளிக்கு எலி, ஆமை மற்றும் புளுக்களை வெற்றிகரமாக அனுப்பி யிருந்தது. ஈரான் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காகவே அது உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. எனினும் ஈரானின் விண்வெளி செயற்பாடுகள் குறித்து அது விரிவாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.





No comments

Powered by Blogger.