அம்பாறையில் மீலாத் தின நிகழ்வுகள் ரத்து
(எம்.பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்டத்தில் 2013 மீலாதுன்நபி தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக இடம்பெற்று வந்தவை நேற்று பெய்த மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் மீலாதுன்நபி தின விழா அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீலாத் விழா நிகழ்வுகளை நாடாத்த பல குர்ஆன் மத்ரஸாக்களினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இதேவேளை நேற்றுப்பகல் பெய்த மழை விடாது பெய்ததால் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பல வீடுகளும், வீதிகளும் மீழ்கியுள்ளன. வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் மீலாதுன்நபி தின விழாவுக்குரிய ஏற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த 2013 ஆம் ஆண்டுக்கான மீலாதுன்நபி தின விழாவை திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியில் நேற்று (25) தொடக்கம் நாளை (27) வரை இடம்பெறவுள்ளன.
நாளை மறுதினம் திங்கட்கிழமை கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக சகல முஸ்லிம் பாடசாலைகளில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்களது.
கல்முனைப் பகுதியிலும் மீலாத் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. மழையை நிறுத்துமாறு கல்முனை சாஹுல் வலிநாயகம் மற்றும் பத்ர் சகாபாக்கள் மற்றுமுள்ள அவுலியாக்கள் அனைவரிடமும் வேண்டினோம் எவரும் உதவி செய்யவில்லை. மவ்லீது மற்றும் ராத்தீப்பு அத்தோடு ஹு ... ஹு .... மஜ்லிஸ் அனைத்தும் போட்டுப் பார்த்தோம். எதுவும் பலிக்கவில்லை.இப்போ எங்களுக்குத் தெரிந்துபோச்சு அல்லாஹ்வும் வாஹ்ஹாபிகளோடுதான் சைட் எடுக்காரு என்று .........
ReplyDelete