மதசார்பற்ற நாடு என கூறி வரும் இந்தியா தீவிரவாதிகளை உருவாக்குகிறது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே பேசினார். அப்போது பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் காவி தீவிரவாதத்தை பரப்புவதற்காக தீவிரவாத முகாம்களை நடத்துவதாக தெரிய வந்துள்ளது என குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போன்றவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அபாண்டமாக புகார் கூறிய ஷிண்டே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவரை உள்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லஸ்கர்-இ- தொய்பா இயக்கம் மற்றும் ஜமாத் உத்-தவா இயக்கத்தின் தலைவருமான ஹபீஸ் சயீத் லாகூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி,
இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். அனால் இந்திய உள்துறை மந்திரி ஷிண்டேயின் மூலம் தற்போது உண்மை வெளியாகி உள்ளது. இதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மதசார்பற்ற நாடு என கூறி வரும் அந்நாடு தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது. எனவே இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.
தீவிரவாத அமைப்புகளாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றான். மேலும் கூறும்போது, பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டினான்.
Post a Comment