நதியைத் தேடும் கடல் (படங்கள் இணைப்பு)
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட கடலோர கரையோரப்பகுதிகள் கடலலைகளினால் கபளிகரம் செய்யப்பட்டுவருவதனால் அப்பிரதேசமக்களை கவலைக்கிடமாக்கியுள்ளதுடன் அவர்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையையும் தோற்றிவித்துள்ளன.
அதிகமான கரையோரப் பிரதேசங்கள் இயல்பாகவே இயற்கைப் பாதுகாப்புடன் கூடியதாக ஆறுகளும், மரம், செடி கொடிகளும் கடலுக்குச் சமாந்தரமாக குடியிருப்பு பிரதேசங்களை அண்டியதாக அமைந்திருந்தன. இதனால் எக்காலப் பகுதியிலும் ஆறுகளையும், குடியிருப்பு பிரதேசங்களையும் ஆழ்கடல் அலைகள் அண்மித்ததே கிடையாது. அந்த வகையில் இறைவன் ஒவ்வொரு படைப்புக்களையும் காரணத்துடனேயே அமையச் செய்துள்ளான். ஆனால் இன்று மனிதன் இயற்கைக்கு மாற்று வழி கற்பிக்க முனையும் போது அவற்றினால் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளான்.
குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 2500 குடும்பங்களைக் கொண்ட ஒலுவில் பிரதேசமானது கடலை மிக அண்மித்த ஒரு பிதேசமாகும். அம்பாறை மாவட்ட மக்களின் பிரதான தொழில் துறையாகக் விவசாயத் துறை காணப்பட்ட போதிலும் ஒலுவில் பிரதேச மக்கள் மீன்பிடி தொழில் துறைக்கே அதிக ஆர்வம் காட்டி வந்தனர். காரணம் அவர்கள் மிக நீண்ட காலமாக அத்தொழில் ஊடாகவே தமது ஜீவனோபாயங்களை தேடி வந்திருந்தமையாகும். மேலும் அவர்களின் பகுதி நேரத் தொழிலாக வீட்டுத் தோட்டம் மற்றும் தென்னைச் செய்கை போன்றனவை மூலமாகவும் வருமானம் பெற்று வந்தனர்.
ஆனால் இன்று நாட்டின் தேசிய நலன் கருதி ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டு வந்தாலும் அதன் மூலம் பல நேரடி மற்றும் மறைமுகமான எதிர் மறை விளைவுகளும், பாதிப்புக்களும் நீண்கால பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளன. பல பில்லியன் ரூபாக்களைக் கொண்டு கடலினுள் பாறாங்கற்களால் நிறப்புவதன் மூலம் இத்துறைமுகத்தினூடாக எதனை எதிர்பார்க்கின்றனர் என்பதனை அத்தனை மக்களையும் சிந்திக்கத் தூண்டுகின்றன. குறிப்பாக அத்துறைமுக நிர்மானப் பணியினூக நேரடியான பாதிப்புக்களுக்கும், பிரச்சினைகளுக்கும் ஆளாகி நிர்க்கதியாகி நிற்பவர்கள் ஒலுவில் பிரதேச மக்களேயாகும்.
ஒலுவில் துறைமுக நிர்மானப்பணி ஆரம்பித்த வேளை அப்பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தினாலும், துறைமுக நிர்மான நிறுவனத்தினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றைத்தவிர ஏனைய அத்தனை விடயங்களும் வெறும் ஏமாற்றுக் கதைகளாகவே உள்ளன என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த அத்தனை மீனவர்களுக்கும் மற்றும் காணிகளை இழந்த நிலச் சொந்தக்காரர்களுக்கும் இதுவரை பூரணமான இழப்பீட்டுத் தொகை மற்றும் மாற்றுக் காணிகள் வழங்கப்படாமை குறித்தும் சுட்டிக்காட்டும் இம்மக்கள் கடலரிப்பிலிருந்து ஒலுவில் பிரதேசத்தை பாதுகாப்பதற்கான எந்தவொரு நிiயான தீர்வினையும் துறைமுக நிர்மான நிறுவனமோ அல்லது அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ பெற்றுக்கொடுக்காமை எதிர்காலத்தில் பாரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.
குறிப்பாக ஒலுவில் துறைமுக நிர்மானப்பணிகள் ஆரப்பிக்கப்பட்;டதன் பின்னர்தான் ஒலுவில் பிரதேசத்திலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கூடுதலான கடரிப்பும், பாதிப்பக்களும் ஏற்பட்டுவருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பிரதேச மக்களின் ஜீவனோபாயதின் உயிர்நாடியாக இருந்துவந்த கடற்தொழில்துறையானது மிக மோசாமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. துறைமுக நிர்மானத்தினால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனோடடு இணைந்த பல ஆயிரக்கணக்கானவர்களின் நாளாந்த தொழில்களையும், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கிவைத்துள்ளன.
இங்கு முக்கியமாக நீண்காலப்பயிர்ச் செய்கையான தென்னைப் செய்கை மூலம் அதிகளவிலான வருமானத்தையும் இப்பிரதேச மக்கள் பெற்றுவந்தனர். ஆனால் இன்று நூறு மீற்றர் வரையிலான நிலப்பகுதிகள் தென்னந் தோப்புக்களுடனும், மீனவர் பாதை மற்றும் கட்டங்கள், குடிசைகள் போன்றன ஆழ்கடலினுள் சங்கமாகிவிட்டன. மேலும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் கடற்கரையை அண்மித்த ஆற்றின் மூலமாகவும் வருமானம் பெற்றுவந்தனர். ஆனால் இன்று வெளிச்ச வீட்டு பகுதியை அண்மித்த பகுதியில் இயற்iயாகவே கடலலைகள் முகத்தவாரம் அமைத்து ஆறும் கடலும் சங்கமித்து ஒலுவில் ஊர்பிரதேசத்தை நோக்கிய நகர்வினை கடல் அமைத்துவருகின்றது. இப்பிரதேசத்தின் பாதுகாப்பும், இயற்கை அழகும், வருமானமும் அமைத்துக் கொடுத்து ஒலுவில் பிரதேசத்திற்கு மிஞ்சியிருந்த எழில்மிகுந்த அந்த ஆற்றினையும் கடல் அள்ளிச்செல்லும் சோகம் அப்பிரதேசமக்களை மட்டுமல்லாது அங்கு நாளாந்தம் வருகை தரும் உல்லாசப் யணிகளையும் மனதைத் தொட்டு நிற்கின்றன.
ஒலுவில் மக்களுக்கோர் அட்வைஸ்.....
ReplyDeleteஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ், உதுமாலெவ்வை ஆகியோருக்கு நல்ல ஒரு ரெஸ்ட் ஹவுசுக்குரிய காணிகளை கொடுத்துப்பாருங்கள். உங்களுக்கு நஷ்ட்ட ஈடு கிடைக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு உடனடியாக கிடைக்கும்.
நாங்கள் அரசியல் கடை (கட்சி) வைத்திருப்பதே "கல்லா" கட்டத்தானே.
நாங்களும் கேள்விப்பட்டோம் நஷ்ட்ட ஈடுகளுக்கான சில அமைச்சர்களின் குறைவான மதிப்பீடு பற்றி ......ஆனால் தங்களின் வங்கி கட்டடத்துக்கு மட்டும் வாடகை அறவிடும்போது பிரதேச மதிப்பீட்டைவிட அதிகம் வசூலிப்பார்கலென்று.