Header Ads



பங்களாதேஷில் இப்படியும் நடைபெற்றது...!


வங்கதேசத்தில், காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, ஒரு வாரமாக பட்டினி கிடந்ததால், கோர்ட் மூலம், மீண்டும் காதலனுடன் இணைந்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்தவர் இக்ரம் சலீம். 

இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை, வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு, தாகா நகரில் உள்ள, தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார். உயிரியல் பூங்காவில், ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு, மூன்று குஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை, உயிரியல் பூங்கா உரிமையாளர் விலை கொடுத்து வாங்கி கொண்டார். இதற்கிடையே, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்த சலீம், தனது செல்ல பெண் கிளி ராணியை, உயிரியல் பூங்காவிலிருந்து அழைத்து வந்தார். 

ஆனால், தனது காதலனை விட்டு, இந்த கிளி பிரிந்திருக்க முடியாமல், கடந்த ஒருவாரமாக பட்டினி கிடந்தது. உயிரியல் பூங்கா உரிமையாளர் அப்துல் வதூத், ஆண் கிளியை தர மறுத்து விட்டார். இது தொடர்பாக சலீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆண் கிளியை பிரிந்திருக்கும் ராணி, பட்டினி கிடப்பதால், அதன் இணையுடன் சேர்ந்து வாழ உத்தர விடவேண்டும், என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உயிரியல் பூங்கா உள்ள ஆண் கிளியை, சலீமிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டார். இதன் மூலம், இரண்டு கிளிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.


No comments

Powered by Blogger.