Header Ads



விமான நிலையங்களில் "ஸ்கேனர்' கருவிகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு


விமான நிலையங்களில் பயணிகளை ஊடுருவி சோதனையிடும் சர்ச்சைக்குரிய "ஸ்கேனர்' கருவிகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த ஸ்கேன் கருவிகளை கொண்டு சோதனையிட்டால் அது சம்பந்தப்பட்ட நபரின் ஆடைகளை ஊடுருவி அவரை நிர்வாணமாக காட்டும். இதனால் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. 

இந்நிலையில் ஜூலை மாதம் முதல் இதனைக் கைவிட இருப்பதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உடலில் வெடிப் பொருள்களை மறைத்து வைத்துக் கொண்டு அமெரிக்க விமானத்தில் ஒருவர் ஏறியதை அடுத்து, இந்த முழு உடல் சோதனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த சோதனைக்கு உள்படும் பயணியின் ஆடையை ஊடுருவி அவரை நிர்வாணமாக பார்க்க முடியும் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பாதுகாப்புக் காரணத்தைச் சுட்டிக்காட்டி அமெரிக்க அதிகாரிகள் இதனை விடாப்பிடியாக கடைப்பிடித்து வந்தனர்.

No comments

Powered by Blogger.