அன்புள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு அவசர மடல்...!
ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு நான் உணர்விழந்து போனேன். செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் பிராத்தித்தேன். ஆனால் என் நம்பிக்கைதான் பொய்யானது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வதைத்தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.
அல்லாஹ், இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக, அவரின் பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியை கொடுத்து அவர்களின் கவலைகளைப் போக்கிவிடுவானாக !!!
என்ற பிராத்தனைகளுடன் விடயத்துக்கு வருகின்றேன்.
இம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் எம் இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டுதான் இவ்வவசர மடலை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
இந்த மரணச் செய்தி எல்லோருக்கும் மிகவும் கவலையான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் நானும் உங்களுடன். ஆனால் கவலை, கஸ்ட்டங்கள் வரும்போதும் அது பற்றிய செய்திகள் வரும்போதும் மிகவும் பொறுமையும், நிதானமும் தேவை.
அதனால் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் இறைவன் புறத்தே இருந்து வந்தவர்கள் அவன்பாலே மீள உள்ளவர்கள்) என்று கூறுமாறு நபியவர்கள் கற்றுத்தந்தார்கள். இது நிதானத்தையும், மன அமைதியையும் போதிக்கும் வார்த்தைகளாகும்.
ஆனால் சிலர் சவூதி அரசை மிகவும் காரசாரமாக விமர்சிக்கின்றனர், பலர், முஸ்லிம் சகோதரர்கள் உட்பட, சவூதிச் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்தை விமர்சிக்கின்றனர். சிலர் மன்னிக்க மறுத்த பெற்றோரை வஞ்சிக்கின்றனர்.
இந்த விடயத்தில் ஒரு இஸ்லாமியனினதும், ஒரு நியாயவாதியினதும் பார்வை இப்படிதான் இருக்க வேண்டும்.
ஷரிஆ சட்டம், பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப் பார்க்கின்றது. அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும், குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை மூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும், குற்றம் செய்யும் பயத்தினையும் வழங்குகின்றது.
வாதத் திறமையும், சந்தர்ப்ப சாட்சியங்களும்தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் விடயமாகும். குறிப்பாக மரண தண்டனைத் தீர்ப்பானது கண்மூடித்தனமாக எடுத்த எடுப்பில் எடுக்கப்படும் தீர்மானம் கிடையாது, இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ரிசானா விடயம் ஏழு ஆண்டுகள் நீண்ட ஒரு வழக்காகும்.
உலக நீதியை, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதி நியாயத்தை நினைவில் கொண்டு நீதி பெற முயற்சிக்குமாறு நீதி வாதிகளுக்கும் (LAWYERS) நீதிவழங்கும் நீதிபதிகளுக்கும் (JUDGES) இஸ்லாம் உத்தரவிடுகின்றது.
ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1. ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.
2. அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்.
3. அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லாஹ் வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?
5. 18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல், அது ஆளுக்காள் வித்தியாசப்படும். 18 என்று உலக வழக்குப்படி எடுத்துக்கொண்டாலும் கூட, ரிஸானா 18 வயதைத் தாண்டாதவர் என்று எமது நாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை சரியான முறைப்படி கடைசிவரை சஊதி நிதிமன்றதைச் சென்றடையவில்லையே, இது யார் குற்றம் தீர்ப்பு வழங்கிய சஊதி அரசின் குற்றமா. அவர்களின் ஆவணப்படி ரிஸானா 18 வயதைத் தாண்டியவர்.
இது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்து பேச வேண்டும். எந்த ஆதாரங்களும் இல்லாமல், எதார்த்தம் என்னவென்று தெரியாமல், கேள்விப் பட்டவைகளை வைத்துக் கொண்டு சட்டம் பேசக்கூடாது. வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.
அதேபோல் காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும். இதை நான் கூறவில்லை, அமெரிக்க அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.
தண்டனை வழங்கப்பட்ட ஒரு ரிசானாவைப் பற்றி இன்று பலர் பேசுகின்றனர். பரிதாவப்படுகின்றனர். ஆனால் ஆயிரமாயிரம் ரிசானாக்கள் இன்னும் அரபுலகிலும் உள்நாடுகளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாவப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர்.
நீதியாகவும் நியாயமாகவும் சிந்தித்தால் இந்த ரிசானாவும் இப்படியான ரிசானாக்களும் உருவாக பல காரணங்களும், பல காரணகர்த்தாக்களும் உள்ளனர். இந்தப் பாவத்தில் அனைவரும் பங்காளிகளே.
1. மஹ்ரம் (தக்க துணை) இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானாக்களின் குற்றம்.
2. தக்க துணை இன்றி வறுமைக்குப் பயந்து அல்லாஹுக்குப் பயம் இல்லாமல் தனிமையில் தன் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது பெற்றோர்கள் செய்த குற்றம்.
3. வறுமையில் வாடும் சமூகத்துக்கு கைகொடுக்காமல், அவர்களுக்குச் சேர வேண்டிய ஸகாத் (ஏழை வரிப்) பணத்தைக் கொடுக்காமல் மறுக்கும் பணக்காரக் கொள்ளையர்கள் செய்த குற்றம்.
4. திருமணமுடிக்க வீடு, பணம் வேண்டும் என்று பெண்களை மாடாய்ப் படுத்தும் சீதனம் கேட்கும் மானங்கெட்ட ஆண்கள் செய்த குற்றம்.
5. பணத்திற்காக பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றி கூட்டிக்கொடுக்கும் முகவர்கள் செய்த குற்றம்.
6. வெளிநாட்டு வருவாய்காக தன் நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு கூலி வெளைக்கனுப்பிய கூறு கெட்ட அரசுகள் செய்த குற்றம்.
7. இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமாக அந்நிய பெண்களை தன் நாட்டில், வீட்டில் வெளிக்கமர்த்திய ஸஊதி அரசு செய்த குற்றம்.
பாவிகளும் நாங்களே, அப்பாவிகளும் நாங்களே, பரிதவிக்கச் செய்பவர்களும் நாங்களே, பரிதாவப்படுபவர்களும் நாங்களே. எல்லாம் நாங்களே.
இனியும் இந்தக் கொடுமைகள் நடக்கக்கூடாது என்றால், எந்த ரிஸானாவுக்கும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்.
1. பணிப்பெண்ணாய் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புவதை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
2. தற்போது தனிமையில் வெளிநாட்டுக்கு சென்று வேலைசெய்யும் பணிப்பெண்கள் அனைவரையும் உடன் திருப்பி அழைக்க வேண்டும்.
3. சீதனத்தை சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்.
4. உலமா சபை பணக்காரர்களிடமிருந்து சகாத்தைப் பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க வேண்டும்.
5. பெண்கள் சமூகப் பாதுகாப்புக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனம் வைத்து முயற்சிக்க வேண்டும், வெற்றிபெற அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை ரிஸானாவுக்காய் பிராத்தித்தவனாய் விடைபெறுகின்றேன்.
வேதனைகளுடன் இவன்
அபூ இமான் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி
very good article brother. masha allah...
ReplyDeleteMasha Allah what a thoughtful facts you have outlined here, each and every your words are heavier than mountains and stronger than atom bombs. every should think the same you said and should act the same way you said. Allah is there for everything.
ReplyDeleteபுனிதமான சரீஅ த சட்ட த்திக்கு மாபெரும் களங்கத்தை இன்று சவூதி ஏற்படுத்திவிட்டது ...,...சிங்கப்பூரில் பாதி ஜனநாயகம் பாதி சர்வாதிகாரம் .இருந்தாலும் ..அங்குள்ள சவுக்கடிகள் கூட எல்லாருக்கும் சமமாகவே செய்கிறார்கள் ......ஒபாமா சொன்னால் கூட அமெரிக்கனுக்கும் சவுக்கடி சவுக்கடிதான் ...ஆனால் சவூதியில் வெள்ளை தோளுக்கு ஒரு நீதியும் கறுப்புத்தோலுக்கு ஒருநீதி யும் .....சவூதி பொம்பிளைக்கு ஒருநீதியும் ....ஸ்ரிலன்கிக்கு ஒரு நீதியும் .... பிலிப்பைன்ஸ் பொம்பிளைக்கு ஒரு நீதியும்.... உண்டு ..காரணம் அங்கு இருப்பது மன்னராட்ச்சி .... பரம்பரை ஆட்சி ... இஸ்லாத்துக்கு விரோதமான ஆட்சி ......வறட்டு கௌரவங்கள் தலைவிரித்து ஆடுகின்றன ...தாங்கள் அரபிகள் என்ற மமதையும் ..அரபிகள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றும் ......குரான் அரபு மொழியில் உள்ளது எங்களைவிட மற்றவர்களுக்கு சரியாகப புரியாது .. மத்தவர்கள் எல்லாம் புதிதாக இஸ்லாத்தை தழுவிய கூட்டம் . நாங்கள்தான் ஒரிஜினல் ......மதத்தவர்கள் பிட்ச்சைகாரர் கள் ...மிஸ்கீன்கள் ...முஹம்மது நபி (ஸல் )அவர்கள் எங்கட உறவினர் ..நீங்கள் அஜமிகள் என்ற வறட்டு கவ்ரவங்கள் ....பணத்திமிர் .. ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் என்ன ஆட்டம் போட்டாலும் இஸ்லாமிய சரீயத் சட்டத்தை அல்லாஹ ..பாதுகாப்பான் ,அதற்கு மாசு கட்பித்துவிடாமல் ஒவ்வொருவரும் அதன் உண்மைத்தன்மையை விளங்கி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் ...
ReplyDeleteulama sabai oru nalum adai seiyadu..anda panathai avanga avangada thewaikaha use pannuvaanga..exampl matale baithul maal.....
ReplyDeleteYes, It is very nice article written by this brother. I also want to say that the reason is that the Risana got hang because of her father. He is not weak or elder when Risana went to Saudi. He can earn and look after his family because Islam says to a Husband that he is responsible for his wife and children in giving food shelter, education and cloths.
ReplyDeleteI pray for sister Risana and she would be in Jannah Insha Allah.
O Allah please forgive her all sins and grant her a paradise.
Thowfeek
accepted....this essay
ReplyDelete"illegality, injustice, lawlessness, partiality, unethicalness,unfairness"
ReplyDeleteMay Allah grant her jannathul Firdose Ameen
nallathu.alhamthulilah......
ReplyDeleteyaa allah-anaivarukkum nalla e-man i koduppayaha.............aameen.
ஷரிஆவும் இல்லை ஒரு மயிரும் இல்லை.....மண்ணாங்கட்டி சவுதி அரசு....அப்ப மரண தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்காகரன் எல்லாம் எப்படி மண்ணரால் பொது மண்ணிப்பு வழங்கப்பட்டு உயிரோடு போனான்....ஷரிஆ என்ற பெயரில் அப்பாவி பெண்ணி்ன உயிர் கொல்லப்பட்டுள்ளது.....சவுதி எஜமானர்களிடம் சல்லிக்கு வேலை செய்யும் கூலி முல்லாக்கள் அதை சப்பைக்கட்டு கட்டி நியாயப்படுத்த முயல்வார்கள் அதுதான் உண்மை....
ReplyDeleteI do not agree the execution of Rizana, this is not the Shareeah law, this is the law of boody Saudi government, this is not the teachings of Holy Prophet. Don't mislead people saying this is a shareeah law. This is totally biased decision towards Arabi against Ajami.
ReplyDeleteஇது இஸ்லாதினின் பெயரால் வஹாபிச சவூதி செய்யும் இஸ்லாத்துக்கு மாறான அட்டுழியம். இந்த குழந்தை (17 வயது) பாலூட்டிய குழந்தை (4 மாதம்) ஏதனால் இறந்தது ஏன்பது ஏவ்வாறு நிரூபிக்கப்பட்டது. இந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி பொலிசாரால் பெறப்பட்ட வாக்குமூலம் வாஹபிச சரியா சட்டத்தில் கூட அனுமதிக்கப்படுள்ளதா?
ReplyDeleteவஹாபிச சவூதியை உருவாக்கிய மேக்கத்தயவர்களுக்கு சரீஆ பலதடவை மன்னிப்பளிப்பது வேடிக்கை இல்லை!
இமாம் மஹ்தி (அலை) வரும் வரைக்கும் இந்த வாஹபிச சவூதி தனது கொலைகளை செய்து கொண்டே இருக்கும்.
I already hated Saudi, from yesterday onward it went 100X more hating. US should have invaded Saudi instead of going to Iraq. Here have some more fact about filthy Saudi.
ReplyDeleteMajor contributing factor to all the misery, backwardness, and violence that exists in the Mideast. An impediment to democracy and freedom in that region and the Muslim world as a whole.
The most hated and despised nation in the Islamic world. They treat their own people like kings and ruthlessly discriminate against individuals of other backgrounds and religions.
Country that funnels billions of dollars of oil money to "charities" that wage war on innocents, while at the same time erects libraries and mosques to "buy" the respect of other nations.
A nation void of liberties, ruled by uneducated Bedouin who a century ago contributed nothing to the wellbeing of mankind. The only thing they contribute now just so happens to be the lifeblood of the industrial world - oil. And that too only because foreigners and ARAMCO are there to do the dirty work for them.
A country that will be absolutely fucked once oil becomes obsolete.
Synonyms: hypocrisy, illiteracy, perfidy, backward-thinking, lethargy...
Antonyms: civilization, education, progress, hard work
15 of the 19 hijackers hailed from Saudi Arabia.
The overwhelming majority of the insurgents in Iraq are Saudis.
The only country in the world that doesn't allow women to drive is Saudi Arabia.
If you practice any religion but Islam in Saudi Arabia, you can be arrested indefinitely. If you speak against the rulers of Saudi Arabia, you may be imprisoned and killed without ever seeing a judge.
Over 70% of Saudi youth are unemployed. Expatriates from poorer countries are more or less slaves in Saudi Arabia, hired to do the work for their Saudi overlords. Apparently, "Saudization" has a long way to go.
Mecca and Medina. Yeah, they're international cities. Look beyond those two locales to get a real feel for Saudi Arabia.
Want a modern example of an Islamic nation? Yeah, don't dwell on Saudi Arabia.
Saudi Arabia should take a page out of Turkey's book if it wants to get out of the abyss it has been digging itself into for the past eight decades.
This comment has been removed by the author.
ReplyDeleteMasha Allah, may Allah reward you brother Abu Iman Idris Hassan
ReplyDeletemasha allah very good article
ReplyDeleteசகோதரர் ஹசன் சஹ்பி அவர்களின் ஆக்கம் முழுமையான இஸ்லாமிய சமுதாயமொன்றின் சிந்தனையை பிரதிபலிக்கிறது.தண்டிக்கப்பட்ட சகோதரி ரிசானா (இன்னலிள்ளஹி வஇன்னா இலைஹிர்ரஜி ஊன் )வுக்கு முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான ரிசானாக்கள் தலை யைக்காத்துககொண்டாலும்,உறவுகளை இழந்து ,சொந்தங்களை, மானத்தை இழந்து வாழ்வதை காண்கிறோம் .சமூகக் கட்டமைப்பின் சிதைவும் ,பள்ளிவாயில் போன்ற முஸ்லிம் ஸ்தாபனங்களின் ஆதிக்கம் , சன்மார்க்க இயக்க வெறியர்களின் கரங்களின் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகளின் பிரதி பலிப்பே இதுவாகும் .
ReplyDeleteறிஸானா நாபிக் குழந்தைக்கு பாலூட்டும் பொழுதோ அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறும் பொழுதோ அருகில் எவரும் உதவிக்கோ சாட்சிக்கோ இருக்க வில்லை. சாட்சியில்லாமலும் ஷரீஅத் தண்டிக்குமா கட்டுரைய எழுதியவர் பதல் தருவாரா..?
ReplyDeletei completly against this article .......Our profeet teach us very deeply and clearly what´s big humanity one hadish it was bettle of UHUD profeet (saw)uncle loss this bettle after word what happend lastly who behind the this murder that person(Hindha) also got forgive.
ReplyDeleteOk where 4 eye withness and Doctor final reports for the baby if she murder?
Saudi arabian animal killed this young lady.
இஸ்லாம் என்றால் சவுதி சவுதி என்றால் இஸ்லாம் என்று போதித்து திறியும் சகல உலமாக்களும் சவுதின் மகுடிக்கி ஆடும் விஷபாம்புகளே உலகளாவிய முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை???
ReplyDeleteதகுதி தராதத்தை முன் நிலை படுத்தாது இன மத மொழி பிரதேசத்தை முன்நிலை படுத்தி ஒரே தொழிலில் பாகுபாடான ஊதியம் தொடக்கம் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதில் கூட பாகுபாடுடன் செயல்படும் சவுதியின் செய்தானிய காட்டு சட்டங்கள் ஒழிந்து உண்மையான ஷரியா சட்டம் அங்கு நிலை நிறுத்தபட்டாலே உலகலாவிய ரீதியில் இஸ்லாதுக்கு ஏட்பட்டுள்ள கழங்கம் நீங்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஹஸன் ஸஹ்வி. உண்மையைச் சொல்லியுள்ளீர்கள். எல்லாப் பக்கங்களையும் சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteபின்னூட்டமிட்ட சகோதரர் முகவைத் தமிழன் தவறான ஒரு செய்தியை எழுதியுள்ளார். மரண தண்டனையை சில வெள்ளையர்களுக்கு ஸஊதி மன்னித்ததாம். அண்மையில் நடந்த பொது மன்னிப்பைத் தவறாகப் புரிந்து எழுதியுள்ளார். முடிந்தால் அதற்குறிய ஆதாரத்தை அவர் சமர்ப்பிக்கட்டும்.
சகோதரர் நவ்ஸர் உங்களைப் போன்று சிந்தித்துக் கேள்வியை நீங்கள் மட்டும்தான் எழுப்பியுள்ளீர்கள் என்று நினைக்கிறீர்களா? ரிசானா சார்பாக மிக இளகுவாக கேட்கப்பட முடிந்த கேள்வி இது. பரிசானாவே குற்றத்தை ஒப்புக் கொண்டதுதான் மறு கேள்விக்கு இடமில்லாது போனதற்கான காரணம்.
ரூமி என்பவர் நபியவர்கள் 9வயதுக் குழந்தையைத் திருமண முடித்ததாகவும் 14 வயது குழந்தையைத் திருமணம் முடித்துக்கொடுத்ததாகவும் விமரிசித்துள்ளார்.
இன்னும் இருவர் ஸஊதியில் அவர்கள் சந்தித்த மோசமான அனுபவங்களை வைத்து எல்லோரையும் பொரிந்து தள்ளியுள்ளார். அவர் நீதிபதியாக இருக்கத் தகுதியில்லை.
இவைகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது ஹஸன் ஸஹ்வியின் எழுத்து எவ்வளவு யதார்த்தபூர்வமானது தவறான உணர்வுகளைத் தவிர உண்மையான அறிவு உங்களின் இந்தக் கட்டுரையிலேயே சிம்மாசனமிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
இந்தக் கட்டுரையை சிறுது காலத்திற்கு முதல் கட்டுரையாக வைத்தால் நல்லது என்பது எனது ஆலோசனை
்katturai eluthiyavar kutram purinthavarukkum enna aathaaram athai patri pesavillai .athu yen?
ReplyDeleteNone seems to believe in predestined matters. If the belief is strong ,then there wouldn't have been a chance to a least degree for all writings,be they for or against.
ReplyDelete