''காத்தான்குடியின் கடற்கரை அபிவிருத்தி'' - அதிகாரமிக்க அரசியல்வாதிகளின் கவனத்திற்கு..!
(M.S.முஹம்மத் பாயிஸ்)
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க "கடற்கரை அபிவிருத்தி" என்ற பெயரில் சில அரசியல்வாதிகளால் கொட்டப்பட்ட கிரவல் குவியல்கள் பல மாதங்களாக காத்தான்குடி கடற்கரை வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் இக்கிரவல் கரைந்து வீதியெங்கும் வடிந்தோடிய நிலையில் காணப்படுகிறது.
கடற்கரை வீதியை உடனடியாக அபிவிருத்தி செய்யுங்கள் அல்லது உங்கள் வீர வசனங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இடையூராகவுள்ள இந்த 'புல் முளைத்த' கிரவல் குவியல்களை உடனடியாக அகற்றுங்கள் என இப்பிரதேச வாசிகள் யாழ்-முஸ்லிம் இணைய தளம் ஊடாக சம்பந்தப்பட்ட காத்தான்குடி அதிகாரமிக்க அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment