Header Ads



முஸ்லிம் சமய புதிய பணிப்பாளராக முஹமட் ஹனிபா முஹமட் ஸமீல் (நளீமி) நியமனம்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக முஹமட் ஹனிபா முஹமட் ஸமீல் (நளீமி) தனது கடமையைப் டாலி வீதியிலுள்ள திணைக்களத்தில் இன்று (01-01-2013) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர்  சமுக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றினார். இவர் இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஐந்து வருடகாலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய வை.எல்.எம்.நவவி உயர் கல்வி அமைச்சின் தனியார் பல்கலைக்கழகங்கள பிரிவில் பணிப்பாளராக இன்று தனது புதிய கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.




No comments

Powered by Blogger.