இலங்கையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 94 தாய்வான் நாட்டினர் நாடு கடத்தப்பட்டனர்
(Sfm) இலங்கையில் இருந்து இணையத்தளம் மூலம் நிதிமோசடியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 94 தாய்வான் பிரஜைகள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் குறித்த நிதிமோசடி தொடர்பில் 100 பேர் இலங்கை மற்றும் சீன காவல்துறையினரால் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் 74 ஆண்களும் 26 பெண்களும் அடங்கியிருந்தனர் இதில் 94 பேர் தாய்வான் நாட்டை சேர்ந்தவர்களாவர்.
Post a Comment