சச்சின் சொல்லிய 90 இலட்சம் நன்றிகள்..!
சமூக வலைத்தளமான "பேஸ்புக்கில்' இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, 90 லட்சத்தை தாண்டியது.
கடந்த 2011, செப்டம்பர் மாதம் சச்சின், "பேஸ்புக்கில்' இணைந்தார். இதில் தனது கருத்துக்களை "வீடியோ' மூலமாகவும் தெரிவித்து வருகிறார்.
முதன் முதலாக கணக்கைத் துவங்கிய சச்சின்,"" எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது சிறுவயது கனவு. கடந்த 22 ஆண்டுகளாக உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பதும் கனவு தான். உங்களின் ஆதரவு இல்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. இந்த வாய்ப்பை கொடுத்த கடவுள், எனக்காக பிரார்த்தித்தவர்களுக்கும் நன்றி,'' என, தெரிவித்து இருந்தார்.
இது வெளியான அடுத்த சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர், சச்சினை பின்பற்றத் துவங்கினர்.
இப்போது "பேஸ்புக்கில்' சச்சினை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை, 90 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சச்சின் வெளியிட்ட "பேஸ்புக்' செய்தியில்," என்னை ஸ்பெஷலாக உணரச் செய்த அனைவருக்கும், 90 லட்சம் நன்றிகள்,' என தெரிவித்துள்ளார்.
Post a Comment