Header Ads



நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் நாளாந்தம் ஏதோவொரு மருந்தை பாவிக்கின்றனர்


இலங்கையில்  90 வீதமான மக்கள் நாளாந்தம் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை எந்தவித மருத்துவ ஆலோசனையும் இன்றி கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்க மருத்துவமனைகளில் மாதம் தோறும் 45-50 மில்லியன் ரூபா பெறுமதியான பரசிற்றமோல் வில்லைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.