ஓடும் விமானத்தின் இறக்கையில் உயிருக்குப் போராடிய 9 அடி நீள மலைப்பாம்பு (படம்)
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ் லேண்ட் நகரிலிருந்து நியூகினியா தீவிற்கு நேற்றுமுன் தினம் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 400 கி.மீட்டர் வேகத்தில் அந்த விமானம் பறந்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த ஒரு பெண் விமானத்தின் இறக்கையில் ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதை பார்த்து விட்டார்.
விமான ஊழியர்களுக்கு அவர் தகவல் அளித்ததும், விமானத்தில் இருந்து விழுந்துவிடாமல் இருக்க சுமார் 2 மணிநேரம் அந்த மலைப்பாம்பு நடத்திய ஜீவமரண போராட்டத்தை அனைத்து பயணிகளும் பயத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில், இறக்கையின் மேல் சொகுசாக படுத்துக்கிடந்த பாம்பு, விமானத்தின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க காற்றில் நிலைகுலைந்து அலைபாயந்தது. தனது வால் பகுதியில் இறக்கையை முடிச்சு போட்டுக்கொண்டு, விமானம் தரையிறங்கும் வரை தனது பிடியை விடாமல் இருந்த அந்த பாம்பு, மைனஸ் 12 டிகிரி குளிரில் விரைத்துப்போய் உயிரிழந்திருந்தது.
Post a Comment