Header Ads



86 வயது முதியவருக்கும், 15 வயது சிறுமிக்கும் விவாகரத்து


(Tn) சவூதி அரேபியாவில் முதியவர் ஒருவருக்கு மனம் முடித்து கொடுக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு விவாகரத்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் மனித உரிமை அமைப்பின் தலையீட்டில் இந்த விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு சவூதி அரேபியாவின் ஜிஸான் பகுதியில் 86 வயது முதியவர் 15 வயது சிறுமியை திருமணம் முடித்த சம்பவம் சர்வதேச அளவில் அவதானத்தைப் பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் சவூதி அரசின் ஆதரவு பெற்ற மனித உரிமை அமைப்பு தலையிட்டுத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி முதியவரை திருமணம் முடித்த சிறுமி முதலிரவில் அறையை மூடி முதியவரை அனுமதிக்கவில்லை. பின்னர் அந்த சிறுமி முதியவரிடமிருந்து தப்பி தமது குடும்பத்தாருடன் இணைந்து கொண்டுள்ளார். மேற்படி முதியவர் சிறுமியின் குடும்பத்திற்கு 17,300 டொலர் வரதட்சணை கொடுத்தே திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தம்மை ஏமாற்றி விட்டதாக முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அந்த பெண்ணுக்கு 25 வயது என தாம் எண்ணியிருந்ததாகவும் முதியவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்த வயதெல்லை வரையறுக்கப் படவில்லை. இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மனித உரிமை அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால் கடும்போக்கு மதத்தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.

இதனிடையே கடந்த புதன்கிழமை மேற்படி முதியவர், சிறுமியின் பெற்றோர் மற்றும் குறித்த பகுதியின் பழங்குடித் தலைவர்களுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து சிறுமிக்கு விவாகரத்துப் பெற்றுக் கொடுத்ததாக மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.