சிரியா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு - 85 பேர் பலி, 150 பேர் காயம்
சிரியாவில் நடைபெற்று வரும் தீவிர சண்டைக்கு பல நகரங்கள் தகர்ந்து வருகின்றன. சிரியாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள அலெப்போ உள்பட பல நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் போராளிகளின் பிடியில் உள்ளன.
அவர்களை குறிவைத்து சிரியா அதிபர் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அலெப்போ நகரில் அதிபர் படையினரின் கட்டிப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் போராளிகள் இரு குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அருகில் நின்றிருந்த வாகனங்கள் எரிந்து சாம்பாலாயின.
கடந்த அக்டோபர் மாதம் அலெப்போ நகரின் முக்கிய சதுக்க குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர். சிரியா உள் நாட்டுப்போரில் 60,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அமைப்பின் மனித உரிமை அமைப்பின் ஆணையர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
Post a Comment