அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரஸின் 8 ஆவது வருடாந்த பேராளர் மாநாடு
தேசிய காங்கிரஸின் 8 ஆவது வருடாந்த பேராளர் மாநாடு நாளை 19-01-2013 அக்கரைப்பற்று நடைபெறவுள்ளன.
தேசிய காங்கிரஸின் எட்டாவது ஆண்டை பூர்தியை கொண்டாடும் வகையில் தேசிய சாங்கிரஸின் 'மீயுயர்' குழுவினால் மிகப் பிரமான்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேராளர் மாநாடு நாளை சனிக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் அதாஉல்லா அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்தப் பேராளர்கள் இருந்து எமக்கென்ன பயன்? மஹிந்த ஜோதியை அணையவிடாமல் உயிர்கொடுப்பதே இந்த பெருச்சாளிகளின் கடப்பாடு.நீங்கள் அக்கரைப்பற்றில் நடாத்துவதைவிட அலரிமாளிகையில் நடாத்துவதே சாலச்சிறந்ததையா.
ReplyDeleteஉங்கள் சேவையில் திகைத்தவர்
ReplyDeleteவரிசையில் நானும் ஒருவன்
எங்கள் [சமுகத்தின்] தேவையை திணிப்பவர்
வரிசையில் உண்மையில் ஒருவன்
இனவாதம் பேசாத தேசிய காங்கிரஸ் தலைவரே..!
"மதம்"பிடித்த யானைகளிடம் தம்மை காத்திட
மார்க்கம் ஒன்றை வகுத்திடு தலைவா..
ஜன்னலில் நீர் செய்த தீவிர வாதம் முதல் - என்
ஜனனத்தில் உமக்கு மட்டும் தீவிர ரசிகன் நான்...!
உமக்குள்ள துணிவினை உறங்க விட்டாயா? இல்லை
உமக்குள்ள ஆளுமையை அழிய விட்டாயா?
படம் காட்டும் பட்ட மரத்தை போலல்லாது
பாய்ந்து கிளம்பு குதிரை போல்.
தேயா சூரியனே..!
தேசிய காங்கிரஸ் தலைவனே..! - எம்
தேசம் வளம்பெற - எம்
தேசத்தில் நாம் நிலை பெற - நாளை
தேதி ஒன்று குறித்திடு - நாம்
தினமும் அதற்கு உழைத்திடுவோம் ...!
கடல் கடந்திருந்தாலும் நான்
கைகொடுப்பேன்
நல்ல செய்தி. நன்றி...
ReplyDeleteஇந்த மகானாட்டிலாவது > தான் ஒரு இஸ்லாமிய நாடாளமன்ற பிரதிநிதி, தனக்கும் தனது கட்சிக்கும் அதிகம் கிடைத்தது முஸ்லிம் சமுகத்தின் வாக்குகள், அம்பாறை பேரினவாதிகளின் சொற்பவாக்குகள் தான் என்பதை நன்றியுடன் ஞாபகமூட்டிக்கொள்ள அமைச்சருக்கும்,சகாக்களுக்கும் நல்லதோர் சந்தர்ப்பம். இதிலாவது தனக்கும் தனது கட்சிக்கும் அதிகம் வாக்களித்து இந்த அரசியல் வாழ்வை தந்த, பேரினவாதிகளால் இன்று பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமுகத்திற்காக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
### எமக்கு அழகான வீடு, சிறந்த போக்குவரத்து வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய வசதிகள் இருந்தும் வாழ்வதற்கான உரிமை கேள்விக்குறி ஆகின்ற போது நான் மேற்சொன்ன விடயங்கள் கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? ### அதே போலவே /// வாய்திறந்து கதைக்க முடியாத கட்சிகளும் அதன் மூலம் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் அரசியல் வாதிகளும் ///
மகாநாடு பற்றிய செய்தியை தவறாது பிரசுரிக்கவும்.
நன்றி.
Rassaam Alithambi
.அடுத்த தேர்தலுக்கு இப்பவே ஆள் பிடிக்கிறார்.பாவம் இந்த அதா. ...அப்படியே வருபவர்களை எல்லாம் அக்கரைப்பற்று வீதி எல்லாம் அழைத்து போய் வீதிகளின் படு பயங்கர நிலையை காட்டுங்கப்பா . , அத்துடன் , ....இந்த மாநாட்டன்றாவது மெயின் வீதி விளக்குகள் எல்லாம் எரியுமா என பாப்போம் ?..
ReplyDelete"மின்னுவெதெல்லம் பொன் அல்ல".
ReplyDeleteமுதலில் ஓர் முஸ்லிமாக நடந்து கொள்ளுங்கள்; அரங்கத்துக்கு மேல் உள்ள குதிரை சிலையை அகற்றுங்கள்.
அரசியலில் நீர் சாதித்தது எமக்கு தேவையில்லை, அது உமது வளர்ச்சி.
சமூகத்துக்காக நீர் சாதித்தது என்ன ?
எமது முஸ்லிம் சமூகத்துக்காக
இந்த தேசிய காங்கிரஸ் அரசியல் ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக இவ் அரசுக்கு கொடுத்த அழுத்தங்கள் எவை ?
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடியதுதானே மிச்சம்.
திரையில் வருவது போல் கோட்டு போட்டுக்கு ஜக்கம்மா ஜக்கம்மா என்றாலே நாலு காசு பார்க்கலாம்.
இவர்களை இன்னும் நம் சமூகம் நம்புகிற.....தே?
இந்த பேராளர் மா(டு)நாட்டின் வியூகம் என்ன???
ReplyDelete