Header Ads



நடுக்கடலில் தத்தளித்த 77 மியன்மார் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டனர்


(inneram)

தாய்லந்தின் புக்கெட் கடற்கரை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 74 முஸ்லிம்களை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பிரிவினர் வன்முறை செய்ததில் பலபேர் கொல்லப்பட்டனர். இதனால் 74 பேர் கொண்ட ஒரு குழுவினர் மலேசியாவில் அடைக்கலம் தேடி படகில் சென்றனர். அப்போது வழிதவறி தாய்லந்து பகுதிக்கு வந்துவிட்டது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பெண்கள், சிறுவர்,சிறுமியர் உட்பட 74 பேரும் மியான்மரின் ராக்கைன் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், அங்கு நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அதனால், அவர்கள் பிழைப்பு தேடி மலேசியாவில் அடைக்கலம் புகுவதற்காக படகில் பயணம் செய்தபோது வழிதவறியதும் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரையும் மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாய்லந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.