Header Ads



முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி 76.4, சிங்களவர்கள் 38.4 - கவலைப்படும் முதலமைச்சர்


இலங்கையில் கடந்த பல பத்தாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிறு குடும்பக் கொள்கையால் சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண முதல்வர் மகிபால ஹேரத் தெரிவித்துள்ளார். 

அரசாங்க தாதிமார் சேவைகள் சங்கத்தின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுகுடும்பக் கொள்கை, இனிமேல் செல்லுபடியாகாது.  1981ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்புடன் 2011ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பை ஒப்பிடும் போது, முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி 76.4 வீதமாக இருக்கிறது. 

ஆனால், சிங்களவர்களின் சனத்தொகை வளர்ச்சி 38.4 வீதமாகவும், தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சி 35.5 வீதமாகவுமே உள்ளது. அதிக குழுந்தைகள் தேவைப்படுகின்ற இன்றைய சூழலில் சிறுகுடும்பக் கொள்கை தேவையற்றது.  அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

2 comments:

  1. ஒரு நகைச்சுவை ....

    முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி, எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்கள் சும்மா இருப்பதாலோ ???????????????????

    ReplyDelete
  2. நல்லா பழங்கள் சாப்பிடுங்க...

    ReplyDelete

Powered by Blogger.