Header Ads



பொஸ்னியா சகோதரிகள் 72 வருடங்களுக்கு பின்னர் இணைவு - பேஸ்புக் உதவியது (படம்)




உலக போரின் போது, பிரிந்த சகோதரிகள், 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, மீண்டும் இணைந்துள்ளனர். ஐரோப்பிய நாடான போஸ்னியாவை சேர்ந்தவர்கள், டேனிஜா, 88; இவரது சகோதரி ஹெடிஜா, 82. 

இரண்டாம் உலக போரின் போது, இவர்களது பெற்றோர் கொல்லப்பட்டனர். இதனால், உயிர் பிழைத்து சென்ற இவர்களது குடும்பத்தினர் பிரிந்தனர். அப்போது ஹெடிஜாவுக்கு, 11 வயது. 

இவர்களது சகோதரர், அமெரிக்காவுக்கு சென்று விட்டதாக கூறினர். "மீண்டும் தன் உடன் பிறப்புகளை பார்ப்போம்' என்ற, நம்பிக்கையை இழந்த ஹெடிஜா, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார். தன் குடும்பத்தினரை பற்றி, தாயிடம் தகவலை சேகரித்து, அது தொடர்பாக, இணைய தளத்தில் தகவலை வெளியிட்டார் ஹெடிஜாவின் மகன்.

 "பேஸ்புக்' மூலம், இந்த தகவலை தெரிந்து கொண்ட டேனிஜா, தனது சகோதரியை சந்திக்க ஆசைப்பட்டார். கடந்த 1941ல், பிரிந்த சகோதரிகள், 200 கி.மீ., தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்துள்ளனர். ஆனால், போதிய தகவல் கிடைக்காததால், பிரிந்து வாழ்ந்துள்ளனர். சமீபத்தில் ஒன்று சேர்ந்த சகோதரிகள், கண்ணீருடன், தங்கள் இளமை கால நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். தற்போது இவர்கள், தங்கள் சகோதரனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.




No comments

Powered by Blogger.