இந்தியாவின் சில பகுதிகளில் மாலை 6 மணிக்கு பின் பெண்கள் வேலைசெய்ய தடை
புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைப்போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நேராத வண்ணம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக, பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளாகும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்குவது மற்றும் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பரிந்துரைக்க, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில் மத்திய அரசு கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இதேபோல், மாநில அரசுகளும் தமக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி விஜய் பகுகுணா தலைமையிலான அரசு, தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதை தடைசெய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
Post a Comment