ஐவரிகோஸ்ட் ஆங்கில புதுவருட கொண்டாட்ட நெரிசலில் 60 பேர் பலி, 200 பேர் காயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் மக்களுக்கு இந்த ஆங்கில ஆண்டின் துவக்கம் சோகமாக மாறியது. பிரதான நகரமான அபித்ஜானில் உள்ள பெலிக்ஸ் ஹூப்பட் போய்னி ஸ்டேடியத்தில் நேற்று இரவு புத்தாண்டு விழா நடைபெற்றது. வண்ண வண்ண வாணவேடிக்கையைக் காண்பதற்காக ஸ்டேடியத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது வெளியில் இருந்த ஏராளமானோர், ஸ்டேடியத்திற்குள் செல்வதற்காக முண்டியடித்து முன்னேறினர். ஒருவரையொருவர் நெட்டித்தள்ளியதால் பலர் கீழே விழுந்தனர். பின்னால் வந்தவர்களும் அடுத்தடுத்து தடுக்கி விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கி சுமார் 60 பேர் இறந்து விட்டனர். 200 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக ஸ்டேடியத்தின் வெளிப்புறம் ஆங்காங்கே ரத்தத் துளிகள், செருப்புகளாக காட்சியளிக்கிறது. அரசு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
vilangutha? ean? engaludaiya markkathil ippady illai enru..............
ReplyDelete