6 வருடங்கள் சிறையிலிருந்து 32 பட்டங்களை பெற்ற இந்தியர்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர், பானு பட்டேல் (57), அன்னிய செலவாணி முறைகேட்டில் ஈடுபட்டதற்காக கடந்த 2005-ம் ஆண்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கல்வித் தகுதிக்கேற்ப சிறையினுள் இருக்கும் ஆஸ்பத்திரியிலும், நூலகத்திலும் வேலை வழங்கப்பட்டது.
ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த பரிச்சயத்தை அறிந்த சிறை அதிகாரிகள், திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மேற்கொண்டு படிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி 2005 முதல் 2011க்கு இடைப்பட்ட 6 ஆண்டு காலத்தில் எம்.எஸ்.ஸி., பி.காம்., எம்.காம்., மற்றும் பல்வேறு உயர்நிலை பட்டங்கள் என பாபா சாகேப் அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் 31 பட்டங்களை இவர் வாங்கிக் குவித்துள்ளார்.
2011-ல் விடுதலையான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் கண்காணிப்பாளராகவும் இருந்துள்ளார். தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய முன்னாள் கைதி இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பாபா சாகேப் அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பல்கலைக்கழகத்தின் சார்பில், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 சிறைகளில் உள்ள கைதிகளின் பட்டப்படிப்புக்கு, பானு பட்டேல் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
ஆசிய உலக சாதனை புத்தகம், லிம்கா உலக சாதனை புத்தகம் ஆகியவற்றில், 'சிறை தண்டனை காலத்தில் அதிக பட்டங்களை பெற்றவர்' என்ற வகையில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
Vaalthukkal ithu oru padippinai
ReplyDelete