Header Ads



குற்றம் நிரூபிக்கப்படாமலேயே றிசானாவுக்கு மரணதண்டனை - வெளிவிவகார அமைச்சு


(எம். எஸ். பாஹிம் + தினகரன்)

ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை அடங்கலான சகல செயற்பாடுகளிலும் குறைபாடு காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எம். ஆர். ஹம்ஸா தெரிவித்தார்.

தண்டனை நிறைவேற்றும் தினம் வரை ரிஸானா தனது தண்டனை குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறிய அவர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

ரிஸானா 6 வாரங்கள் தான் சவூதியில் பணி புரிந்தார். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளை பராமரிக்கும் பயிற்சியும் அவருக்கு இருக்கவில்லை. அவர் தினமும் 3 தடவை குழந்தைக்கு பாலூட்டி வந்துள்ளார். சம்பவ தினம் 2 தடவை பாலூட்டிய போதும் எதுவித பிரச்சினையும் எழவில்லை. மூன்றாவது தடவையே குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது.

பக்கத்துவீட்டிலுள்ள தெலுங்கு பெண்ணே ரிஸானாவுக்கு மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார். சரியாக தகவல் பரிமாறப் படாததாலும் ரிசானா கொலை குற்றவாளியாக்கப்பட்டார். மருத்துவத்தின் அறிக்கையிலும் கொலைக்கான ஆதாரமெதுவும் இருக்கவில்லை எனவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலே மேன்முறையீடு செய்யப்பட்டதோடு மேன்முறையீட்டு நீதிபதிகளாகவும் முதலில் விசாரணை நடத்திய நீதிபதிகளே நியமிக்கப்பட்டிருந்தனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ புதிய சாட்சிகளை அழைக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய அவர் சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாமலே ரிஸானாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ரிஸானாவிற்கு மரண தண்னை விதிக்கப்பட்டது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. அவரை சென்று சந்தித்து வந்த டாக்டரூடாகவே எமக்குத் தகவல் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். ரிஸானாவின் ஜனாஸாவை ஒப்படைக்குமாறு தூதரகத்தினூடாக அறிவித்திருந்த போதும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

ரிஸானாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு சவூதி அரேபிய அரசாங்கம் பதிலளித்துள்ளது குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர், வெளிவிவகார அமைச்சிற்கு அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்று கூறினார். நாட்டுத் தலைவரொருவர் நேரடியாக தலையிட்டு ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

இதே வேளை சவூதி அரேபிய செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக் கையில், ரிஸானா நபீக் சிறுமி எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் உத்தியோகபூர்வ கடவுச் சீட்டில் ரிஸானாவுக்கு 21 வயது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப் பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிஸானா தொடர்பான வழக்கு விசாரணை நியாயமாக இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டையும் சவூதி நிராகரித்துள்ளது.

7 comments:

  1. Why dont you guys go and hung your heads in shame?. Your statement proves that you all are bunch of utterly useless lot who has no diplomacy what so ever. Does anyone believe that the foreign ministry of this banana republic has any credibility or respect any where in the world?
    Please stop beating around the bush and let this innocent girl rest in peace and the family have some privacy at this difficult time. Everyone in the world know that there is a great injustice done in the name of Sharia so we dont want you guys to add more salt to the wound.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்

    சகோதரி ரிஸானாவின் மரணத்தை எண்ணி மனம் பதைபதித்தது. இந்த அப்பாவி ஏழை முஸ்லிம் பெண் தன்னுடைய குடும்ப சுமையின் காரணமாக படிக்கும் வயதில் கடல் தாண்டி வித்தியாசமான கலாசாரமுடைய அதுவும் சவூதி போன்ற அடிமை படுத்தும் மனோபாவங்கள் கொண்ட குடும்பங்களில் வேலை செய்வதே மிகவும் கஷ்டமானதே.

    சமீபத்தில் கூட ஒரு ஸ்ரீலங்கா இந்து சகோதரி தான் பணிபுரிந்த இங்கு தான் பணிபுரிந்த வீட்டினராலேயே கொல்லப்பட்டதும் அதற்காக அவர்கள் இழப்பீடு தொகை வழங்கினார்கள். சுமார் 70000 ரியால்.

    மற்றொரு வீட்டில் ஒரு சகோதரிக்கு உடம்பில் ஆணி அடித்து சித்திரவதை. இப்படி எத்தனையோ செய்திகள்.

    வெளிவராத செய்திகள், பாலியல் கொடுமைகள் இப்படி இன்னும் எவ்வளவோ?

    பொதுவாக நம் மக்களுக்கு சவூதி அரசு மேல் அப்படி ஒரு பாசம். என்னவென்று தெரியவில்லை. கேட்டால் உலகிலேயே ஷரியத் சட்டப்படி நடக்கும் நாடென்று. ஆனால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தனர் என்று சொல்ல தேவையில்ல.

    அவர்களுடைய டாம்பீகங்களும் படாடோபங்களும் பார்த்தாலே வெறுப்பாக வருகிறது.

    உமர் ரலி அவர்களுடைய துணியில் எவ்வளவு ஓட்டு போடபட்டிருன்தது என்று சஹாபக்களே வருந்தும் அளவுக்கு எளிமையின் சிகரமாக இருந்தார்கள்.

    எதற்கு எதிராக இமாம் ஹுசைன் அவர்கள் போராடினார்களோ அதே இப்போதும்.

    இன்னும் எவ்வளவோ எழுதலாம். இன்ஷா அல்லா காலம் பதில் சொல்லும்.

    முகவை அப்துல் ஜப்பார்.

    ReplyDelete
  3. அன்பான முஸ்லிம் சகோதர்களே,

    உங்கள் அன்பு புரிகிறது.

    நடந்தவை எல்லாம், வல்ல இறைவனின் நாட்டப்படியே நடந்தது , நடக்கின்றது, நடக்கும்.

    நடந்த சம்பவத்தை அல்லாஹ்விடம் விட்டுவிடுங்கள்.
    ஷரியா சட்டம் இறைவனின் சட்டம் அது நபி (ஸல்) அவர்கள் வழி முறை.மார்க்க சட்டம் பற்றி போதிய தெளிவு இல்லாமல் யாரும் இறைவனையும் அவனது தூதரையும் நிந்தித்து (அறியாமையில்) விடாதீர்கள்.
    என்னையும், உங்களையும்,நம் எல்லோரையும் இறைவன் மன்னிப்பானாக. ஆமீன்

    கடந்த காலங்களில் இந்த அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்கு இருந்தார்கள்? இப்ப இந்த சப்ப கட்டு கட்டுகிறார்களே.

    முடியுமாக இருந்தால் மறைந்த சகோதரிக்கு துஆ செய்யுங்கள், அந்த குடும்பத்துக்கு உதவி புரியுங்கள் , அதுபோல் உள்ள சகோதர்களுக்கும், குடும்பத்துக்கும் உதவி புரியுங்கள்.

    அல்லாஹ் உங்களுக்கு இம்மையுலும், மறுமையுலும் உதவி புரிவான்.

    மாறாக, மாற்று இனவாத சகோதர்களுக்கு நம் சமூகத்தை நிந்திக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்.

    நம் இணையமும் இதற்கு உதவி புரிய வேண்டும்.

    ReplyDelete
  4. தற்போது எதை பேசியும் பயன் இல்லை போன உயிர் மீண்டுவராது .
    இனிபோக உள்ள ரிசனாக்களை பற்றி சிந்திப்போம் !!!!!!!!!!
    அல்லாஹுவே எல்லாம் அறிந்தவன் அவனிடமே விட்டுவிடுவோம் அவன் அதற்கு கூலியை கட்டாயம் கொடுப்பான்.

    ReplyDelete
  5. அந்த நேரம் இந்த ஹம்ஸா காக்கா மார்கள் எங்கே போயிருந்தார்கள்?????

    ReplyDelete
  6. لا مانع لما أعطيت ولا معطي لما منعت والله احكم الحاكيمين

    ReplyDelete
  7. முறையான விசாரணை நடக்கவில்லை என்ற ஒரு வார்த்தையை ஏட்டு வருடங்களுக்கு முன் கூறாமல் ரிஸானாவின் கலுத்து போனபின் கூறுகிறார்

    ReplyDelete

Powered by Blogger.