பாவனைக்கு உதவாத 50.000 டின் மீன்கள் கைப்பற்றப்பட்டன
பேலியகொடை பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து பாவனைக்கு உதவாத 50 ஆயிரம் டின் மீன்களை நுகர்வோர் சேவைகள் அதிகார சபை பறிமுதல் செய்துள்ளது. இதன் பெறுமதி 50 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் சேதமடைந்திருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அவை பாவனைக்கு உதவாத நிலையிலுள்ளமை தெரியவந்துள்ளது. பாவனைக்கு உதவாத டின் மீன்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. sfm
Post a Comment