5000 மில்லியன் ரூபா கடனை செலுத்தாமல் 10 பேர் இலங்கையை விட்டு தப்பியோட்டம்
முதலீட்டுச் சபையின் கீழ் தொழிற்சாலைகளை நடத்திய குறைந்தது 10 வெளிநாட்டுத் தொழில் முனைவோர், 5000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான உள்நாட்டு வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இலங்கையை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இத்தகைய நிறுவனங்களுக்கு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்நாட்டு வங்கிக்கடன் வசதிகளும் போதியளவில் செய்து கொடுக்கப்பட்டன. இவை வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதால், கடன்களை மீள வசூலிப்பதில் சில வங்கிகள் அதிக அக்கறை காண்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையிலேயே குறைந்தது 10 முதலீட்டாளர்கள் 5000 மில்லியன் கடன்தொகையை திருப்பி செலுத்தாமல் இலங்கையை விட்டு ஓடியுள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான இளம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நிட்டம்புவப் பகுதியில் உள்ள இத்தகைய நிறுவனம் ஒன்றின் ஆடைதயாரிப்பு நிறுவனம், மறுநாள் நிறுவன விடுமுறை நாள் என்றும், பணியாளர்கள் கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் செல்லலாம் என்றும் கடந்த 14ம் நாள் தமது பணியாளர்களுக்கு அறிவித்திருந்தது.
இந்தநிலையில், குறித்த நிறுவனம் மூடப்பட்டு விட்டதாகவும், இறுதிமாத ஊதியத்தை நாளை மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பமுனுகம பகுதியில் உள்ள மிதிவண்டி ஒருங்கிணைப்பு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் கடந்தமாத தொடக்கத்தில் இலங்கையை விட்டுத் தப்பியோட முனைந்துள்ளார். பணியாளர்கள் அவரது தப்பியோடும் முயற்சியை தடுத்து நிறுத்தியதை அடுத்து, கடந்த மாதம் 20ம் நாளுடன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
புது பல சேன இதையெல்லாம் மீட்டெடுக்கும்
ReplyDelete