Header Ads



500 கோ ரூபா பணத்தை மோசடி செய்தவர் கண்டியில் கைது


(ஜே.எம்.ஹபீஸ்)

கண்டி உடுவல பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவர் 500 கோடிக்கும் மேற்பட்ட ரூபாய்களை மோசடி செய்ததாகத் தெரிவித்து கேகாலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி வதுலியந்த, உடுவெல என்ற இடத்தைச் சேர்ந்த டப்லியு.பி. விமல் விக்கிரம ரத்ன என்ற 46 வயது நபர் கடந்த மூன்று வருட காலத்தில் மேற்படி 500 கோடிக்கும் மேற்பட்ட பணத்தைப் பலரிடம் மோசடி செய்துள்ளார். பிறர் காசோலைகளை பணமாக மாற்றிக் கொடுக்கும் மோசடி வர்த்தகத்தில ஆடுபட்ட இவர் மரப்பலகை உற்பட இன்னும் பலவற்றை வினியோகம் செய்து வந்துள்ளார்.

குருநாகலைப் புகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியுடன் தங்கி இருக்கும் போது 30 இலட்ச ருபா பணத்துடன் இவர் கைதாகியுள்ளார். இந்நபருக்கு எதிராக 61 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவனல்லை பதில் மாஜித்திரேட் கலகம சமரசேகர முன் ஆஜர் செய்த போது எதிர்வரும் 30ம் திகதி வரை தடுத்து வைக்கு மாறு உத்தரவிட்டார்.

மாவனல்லலையைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு கோடியே முப்பது இலட்சம் ரூபாவும், அராங்க மரக்கூட்டுத்தாபனத்திற்கு இரண்டு கோடியே அறுபது இலட்ச ரூபா மோசடி செய்துள்ளதாகவும் மொத்தம் 500 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதி நவீன வாகனத்தை பயன் படுத்தும் இந்நபரின் மோசடி வளையில் பலர் சிக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.மேற்படி நபர் நவீன சொகுசு ஹோட்டல்களில் மாறிறமாறித் தங்கி இருந்ததாகவும் தெரிய வருகிறது.



1 comment:

  1. வடிவேலு -
    கிளம்பிட்டாங்கை...........யா ? கிளம்பிட்டாங்க ?

    சிலவேளை பொதுபல சேனாவின் பார்வையில் இவரும் முஸ்லிம் வியாபாரியோ ?

    ReplyDelete

Powered by Blogger.