50 வருடங்களாக வைத்தியத்துறையில் சேவையாற்றும் டாக்டர்.சமத் இஸ்மாயிலுக்கு கௌரவிப்பு
(ஜே.எம்.ஹபீஸ்)
பேதங்களை மறந்து சேவை புரிவது கண்டிய மக்களின் பண்பாகுமென்று மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
கண்டியைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் பல இணைந்து கண்டி நகரின் சிரேஷ்ட பிரஜைகளாக இருந்து சமூகத்திற்கு பாரிய சேவைகளைப் புரிந்த நால்வர் 'வாழ்த்த வேண்டியவைகள் வாழ்தப்பட வேண்டும்' விறுது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
(12.1.2013) மாலை கண்டியில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் தமிழ் மொழி பேசும் மூவர் அதில் உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல கிறிகட் வீரர் முரளீதரனை ஈன்றெடுத்த சமூக ஜோதி எஸ்.முத்தையா, கண்டியில் 50 வருடங்களுக்கு மேலாக வைத்தியத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் டாக்டர்.சமத் இஸ்மாயில், மற்றொறு சமுக சேவகரும் நிண்டகாலமாக வைத்தியராகக் கண்டியில் கடமை புரிந்து வரும் டாக்டர் நிகால் கருணாரத்ன, 1970களில் பிரபலமாகப் பேசப்பட்ட த கல்ப் நியூஸ் ஊடக ஸ்தாபகர் கார்ல் மலர் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ பிரதம அதிதயாகக் கலந்து உரையாற்றினார். அவர் அங்கு தெரிவித்ததாவது,
இலங்கையருக்கான ஒரு அலாதியான கட்டமைப்பு காணப் படுகிறது. அதனையே தற்போது நீங்கள் பார்த்தீர்கள். எவர் பாராட்டப் பட வேண்டுமோ அவர்கள் இங்கு பாராட்டப்பட்டுள்ளார்கள். இன,மத, குல பேதங்கள் இன்றி எல்லா இனத்தினரும் தெரிவு செய்யப்பட்டுள்ள்னர். அதுமட்டுமல்ல அவர்கள் நாட்டுக்காக, பிரதேசத்திற்காக மக்களுக்காக உயர் சேவை புரிந்தவர்களாகும். இன மத மொழி வேறு பாடு இன்றிச் சேவை செய்தவர்களை இனமத மொழி வேறுபாடு இன்றி கௌரவிக்கப்பட்டமை கண்டிய மக்களது தனித்தன்மையாகும் என்றார்.
Post a Comment