Header Ads



எகிப்தில் பொதுமக்கள், பொலிஸார் மோதல் - 7 பேர் மரணம், 476 பேர் காயம்


2 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. அதில் 7 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து 3 வாரங்களில் முபாரக் பதவி விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், கலவரம் நடந்த 2-ம் ஆண்டு நிறைவு கடை பிடிக்கப்பட்டது. 

இதையொட்டி, எற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர். அப்போது தற்போதைய அதிபர் முர்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தக்ரீக் மைதானம் அருகேயுள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். இதனால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் பலியானார். 

இதையடுத்து கலவரம் தீவிரம் அடைந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை முடிந்ததும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கெய்ரோ நகரின் தக்ரீர் மைதானத்தில் திரண்டனர். அதிபர் முர்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதே போன்று அலெச்சாண்ட்ரியா, சூயஷ் உள்ளிட்ட பல நகரங்களின் தெருக்களில் போராட்டம் நடந்தது. 

போராட்டக்காரர்களை அடக்க போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மீது கல்வீச்சு நடந்தது. 2 அரசு கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. அதிபரின் கூட்டணி கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அலுவலகமும் தீவைத்து எரிக்கப்பட்டது. எனவே, கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 7 பேர் பலியாகினர். 476 பேர் காயம் அடைந்தனர். போராட்டக்கரர்கள் நடத்திய கல்வீச்சு உள்ளிட்ட தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 55 பேர் காயம் அடைந்தனர்.


No comments

Powered by Blogger.