Header Ads



பாகிஸ்தானில் ஒருவருக்கு 48 மரண தண்டனைகள்


பாகிஸ்தானின் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள உளவுத்துறை அலுவலகம் மீது கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுததாரிகள்  வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை உலுக்கிய இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தலிபான் ஆயுததாரி உஸ்மான் கனி கைது செய்யப்பட்டார். 

இவ்வழக்கு லாகூர் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி உஸ்மான் கனிக்கு 48 மரண தண்டனைகள் விதிப்பதாக நீதிபதி மசூர் அர்ஷத் அதிரடி தீர்ப்பை வழங்கினார். 

மேலும் அபராதம் மற்றும் இழப்பீடாக 12 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வசிரிஸ்தான் பழங்குடி பகுதியில் உள்ள தலிபான் முகாம்களில் பயிற்சி பெற்ற கனி, பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.