Header Ads



ஒருவரை கைதுசெய்து 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூலம்


ஒருவரை கைதுசெய்து 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நீதிவான் ஒருவருக்கு முன் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர், 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் சட்டமூலமே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2005 ஆம் ஆண்டு இந்த சட்டம் அமுல்செய்யப்பட்ட போதும் பின்னர் 2007 ஆம் ஆண்டு, சட்டம் மீளப்பெறப்பட்டது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு வரை குறித்த சட்டம் அமுல்செய்யப்பட்டபோதும் அதற்கு பின் அது நீடிக்கப்படவில்லை. இந்தநிலையிலேயே புதிய ஒழுங்கை கொண்டு வர முயற்சிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஏற்கனவே ஜே. வி பியும், முற்போக்கு முன்னணியும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன.

இதனை விசாரணை செய்த, உயர்நீதிமன்றம் குறித்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.