ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானம் மீது ராக்கெட் வீச்சு - 44 பயணிகள் உயிர் தப்பினர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பாகிஸ்தான் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகருக்கு பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. அதில், 44 பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்தனர். காபூல் விமான நிலையல் ஓடுதளத்தில் இருந்து வானில் பறக்க அந்த விமானம் தயாரானது. அப்போது அந்த விமானத்தின் மீது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் விமானத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை. எனவே, அதில் பயணம் செய்த 44 பயணிகளும் உயிர் தப்பினர். விமான நிலையத்தின் மீது நடத்திய ராக்கெட் குண்டு வீச்சு பாகிஸ்தான் விமானத்தை தாக்கியதாக கூறப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவுக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து ராணுவவீரர் ஆப்கன் வீரரால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஹெல்மண்ட் மாகாணத்தில் நக்ரி சரஜ் மாவட்டத்தில் உள்ள இங்கிலாந்து விமானபடை தளத்தில் நடந்தது. இதில் மேலும் 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். ராணுவத்தில் ஊடுருவி இருந்த தங்களது ஆள் தான் இங்கிலாந்து வீரரை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment