அல்ஜீரியாவில் முஸ்லிம் போராளிகள் அதிரடி - 41 வெளிநாட்டினர் சிறைபிடிப்பு (வீடியோ)
அல்ஜீரியாவின் கிழக்கில் உள்ள கச்சா எண்ணெய் படுகை மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் போராளிகள் அங்கிருந்த 41 வெளிநாட்டினரை பிணைக் கைதியாக சிறைபிடித்தனர்.
7 அமெரிக்கர்கள் மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 41 பேரை சிறை பிடித்துள்ளதாக போராளி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மவுரிடேனியன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ் மீது தாக்குதல் நடத்தியதில் பிரிட்டனைச் சேர்ந்தவர் உள்பட 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு மாலியில் தாக்குதல் நடத்துவதற்காக தனது வான்வழியைப் பயன்படுத்திக் கொள்ள பிரான்ஸ் விமானத்துக்கு அல்ஜீரியா அனுமதி அளித்ததைக் கண்டித்து இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்,அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய நாடுகள் தான் முஸ்லிம் நாடுகளை சுரண்டுகிறது எதிராகவும் இருக்கின்றன.இவர்களின் மீடியாக்களில்தான் சில முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கெதிரான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
ReplyDeleteகுர்ஆனைப் பற்றி ஒழுங்காகத்தெரியாத,ஜிஹாத் என்ற பெயரில் கொலைவெறி பிடித்து அலையும் பயித்தியக்காரக் கூட்டம் முஸ்லிம் போராளிகள் என்றால் பகுத்தறிவான முஸ்லிமுக்கும் இந்தப் பயித்தியக்காரக் கூட்டத்திற்கும் வித்தியாசம் இல்லையா?
ReplyDelete