நாய்கள் சுற்றிவளைத்து கடித்ததில் 4 பேர் பரிதாப மரணம்
மெக்சிகோவில் நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில் குழந்தை, தாய் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவின் லா ஈஸ்டிரல்லா மலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வனப்பகுதி உள்ளது. இங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதர் நடுவே கடந்த வாரம் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.
இந்நிலையில், அதே காட்டின் வேறொரு பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு இளைஞர் மற்றும் இளம்பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலிலும் காயங்கள் இருந்தன. கொள்ளையர்கள் தாக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பணம், பொருட்கள் கொள்ளை அடிக்கப்படவில்லை. இதையடுத்து, விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் குகை மற்றும் பாறைகளின் நடுவே வாழும் நாய்கள் அவர்களை சுற்றிவளைத்து கடித்து குதறியது தெரியவந்தது. 8 குட்டிகள் உள்பட 25 நாய்கள் பிடிக்கப்பட்டன.
Post a Comment