Header Ads



பாடசலைக்கு 4 வயதிலும், பல்கலைக்கழகத்திற்கு 16 வயதிலும் மாணவர்களுக்கு அனுமதி..?


இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை குறைந்த வயதிலேயே உள்வாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாணவர்களை ஓரிரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்காக பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களை 4 வயது போன்ற குறைந்த வயதிலேயே சேர்க்க முடியுமா அல்லது 7 முதல் 10-ம் வகுப்பு வரையான வகுப்புகளில் ஒன்றைக் குறைக்க முடியுமா என்று ஆராய்ந்துகொண்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறினார்.

கடந்த தினங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் கலந்துகொண்ட வதிவிட கருத்தரங்கின்போது இதுபற்றி ஆழமாக ஆராயப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார். கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சர் திசாநாயக்க மேலும் தெரிவித்தார். 

தொழில் வாய்ப்புமாணவர்களை 16 அல்லது 17 வயதுகளுக்குள் பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்குவது உயர்கல்வி முடித்தபின்னர் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் தற்போது தொழிற்சந்தைக்குத் தேவையான விதத்தில் கற்கைநெறிகள் மாற்றியமைக்கப்பட்டுவருவதாகவும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவுகளை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டத்தில் அமைந்துள்ளதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் 7 லட்சம் தொழில்களுக்கு வெற்றிடம் இருப்பதாகவும் ஆனால் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் மாணவர்கள் அரச தொழில்களைத் தேடிக் கொண்டிருப்பதாலேயே நாட்டில் பட்டதாரிகளுக்கு தொழில் கிடைப்பதில்லை என்றும் இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் கூறினார். bbc

No comments

Powered by Blogger.