பிரான்ஸில் 3 குர்திஷ் பெண்கள் சுட்டுக்கொலை
(Tn) பிரான்ஸில் மூன்று குர்திஷ் இனப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாரிஸிலுள்ள குர்திஷ் நிலையத்திற்குள் நேற்று இரவு இச்சம்பவம் இடம் பெற்றுள் ளது.
இதில் குர்திஷ் தனி நாட்டு கோரிக்கை அமைப்பான குர்திஷ் தொழிலாளர் கட்சியின் இணை நிறுவனரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்ட மூவரினதும் உடல்கள் நேற்று அதிகாலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதோடு மூவரினதும் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயம் உள்ளது. இது படுகொலை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் பொலிஸார் அது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் துருக்கி அரசுடன் பல தசாப்தங்களாக தனி நாடு கோரி போராடும் ஆயுதக் குழுவான துருக்கி தொழிலாளர் கட்சியின் இணை நிறுவனர் சகின் கன்சிசும் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். தவிர குர்திஷ் நிலையத்தின் தகவல் தொடர்பு பிரிவில் பணி புரிந்த 32 வயதான பிதான் டொகான் என்பவரும் லியோன் எடார்ட் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment